பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரு தட்சணை 203

பொழிந்து தள்ளிவிட்டான்?’ என்று பாகவதர் கூறிக் கொண்டிருக்கும்போது பஞ்சு அண்ணாவும் ராஜப்பாவும் வந்தனர். அவர்களைக் கண்டதும் பாகவதர் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றார். லட்சுமியும் சுந்தரியும் உள்ளே சென்றார்கள்.

நேற்று உங்கள் சிஷ்யன் வெளுத்துக் கட்டிவிட்டான்’ என்று கூறிக்கொண்டே பஞ்சு அண்ணா பாகவதரின் பக்கத்தில் அமர்ந்தார்.

எல்லாம் உங்களைப் போன்ற பெரியவர்களுடைய ஆசீர்வாதந்தான்’ என்றார் பாகவதர் அவர்களைப் பார்த்து.

பெரியவர்களாவது ஒண்ணாவது! இத்தனை வயதும் அநுபவமும் ஆகி என்ன பண்ணுகிறது? எங்கே, ஹரி இருக்கிறானா?’ என்றார் பஞ்சு அண்ணா உள்ளே பார்த்தபடியே.

இல்லை, வெளியே போயிருக்கிறான். நாம் தாராள மாகப் பேசிக்கொள்ளலாம்’ என்றார் பாகவதர்.

இதில் என்ன அண்ணா ஒளிவுமறைவு? இரவு முழு வதும் தூக்கமே வரவில்லை. பொழுது விடிந்ததுமே உங்களை வந்து பார்த்துச் சொன்னால்தான் சமாதானம் ஆகும்போலிருந்தது. நேரே வந்துவிட்டேன்.”

ஆமாம், ராஜப்பாவை எங்கே பிடித்தீர்கள்?’

கும்பகோணத்திலிருந்து ஒரு காரியமாக வந்தேன். அவனும் இதே நோக்கத்தோடுதான் வந்து கொண்டிருந் தான். வழியிலே கலந்துகொண்டோம். அப்பா! இந்த மாதிரி; கச்சேரிக்கு உட்கார்ந்து முழுசாக நான்கு மணி நேரம் தம் கட்டி வாசித்து எத்தனை நாளாயிற்று? அப்படியே அந்தக் காலத்தில் நீங்கள் பால்யத்திலே