பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"1 5 நெஞ்சிலே முள்

அதற்குள் ஆற்றுக்குப் புறப்பட்டு விட்டாயா

ஹரி? F r

அவளுடைய கேள்விக்கு உடனடியாகப் பதில் கூற அவன் தயங்கினான்; நிலத்தையும் கட்டை விரலையும்

பார்த்தபடியே நின்றான்.

  • அப்பா ஊரில் இல்லாதபோதுகூட ஏன் இத்தனை சிக்கிரம் ஹரி?’ என்று அவள் கேட்டாள்.

இப்பொழுது போனால்தானே கொஞ்சம் நிம்மதி யாகக் குளிக்கலாம்? அக்கம் பக்கம் மற்றவர்களுடைய செளகரியங்களைக் கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை. இஷ்டத்துக்குத் துவைக்கலாம், மேலும், ஐயா ஊரில் இல்லை என்பதற்காகப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள லாமா?’ என்றான்.

• நானும் அதைத்தான் சொல்ல இங்கு வந்தேன்? அப்பா ஊரில் இல்லை என்பதற்காகப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாமா? இன்னும் இப்படி எத்தனை நாள்தான் கூச்சப்படுவாய்? அப்பா இருந்தால், உன்னை புதன்கிழமை காலையில் வெறுமனே போய் குளிக்க அநுமதிப்பாரா? கொஞ்சம் இரு; இதோ ஒரு நொடியில் கிண்ணத்தில் எண்ணெய் எடுத்து வருகிறேன்.’ . .

வேண்டாம்: அதற்கெல்லாம் நேரம் இல்லை . எட்டரை மணிக்குள் ஸ்டேஷனுக்குப் போயாக வேண்டும்? நேரமாகிவிட்டது; நான் வருகிறேன். ‘

‘ஒன்றும் நேரமாகிவிடாது. மூன்று மணியிலிருந்து பாடுகிறாய். கண் வேறு சிவந்து கிடக்கிறது; நிமிஷத்தில் வந்து விடுகிறேன். பதிலுக்குக்கூடக் காத்திராமல் காயத் திரி கையில் பாலுடன் வேகமாக உள்ளே சென்றாள். ஹரி அந்தத் திசையையே பார்த்தபடி சிலைபோல் நின்று கொண்டிருந்தான்.

ஒன்பது வயதுப் பாலகனாக அந்த வீட்டில் நுழைந்தது முதல் காயத்திரியை அவனுக்குத் தெரியும். அன்பை வாரி