பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 புல்லின் இதழ்கள்

பாடுவீர்களே, அதுதான் எனக்கு நினைவு வந்தது. அழுதுவிட்டேன். இவ்வளவு சரக்கை வைத்துக் கொண்டு அன்று இங்கே பூனைப் போலப் பாடி எப்படி ஹரி ஏமாற்றி விட்டான் பார்த்தீர்களா?’ என்றார்.

“எல்லாம் வண்டியிலே உட்கார்ந்து பார்த்துக் கொண்டுதானே இருந்தேன்? நான்கு தடவை உங்களைத் தேடி வீட்டுக்கு வந்தானே. பையன் புதிதாயிற்றே! இரண்டு நாளைக்குச் சேர்ந்தாற் போல அவனுடன் வாசித்துத் தயார் செய்வோம்’ என்று உங்களுக்குத் தோன்றியதா? அலட்சியமாக நினைத்துக் கொண்டுதானே அன்று இங்கே நீர் அப்படிப் பிடில் வாசித்தீர்? ராஜப்பாவோ தான் பெரிய மேதாவி மாதிரி தன் விவகாரத்தையெல்லாம் பூனை மாதிரி இருந்தவனிடம் காட்டினான். இன்னோர் அசடாக இருந்தால் பயந்து போய் விழிக்கும் புலி வாலை அல்லவா போய்த் திருகி விட்டோம்?’ என்று-பாய்ந்த பிறகுதானே உங்களுக்குப் புரிந்தது?’ என்று எண்ணிக் கொண்டார் பாகவதர்.

அங்கு வந்த சுசீலா, “நேற்று நீங்கள் மிகவும் நன்றாக வாசித்தீர்கள் அண்ணா என்று பஞ்சு அண்ணா விடமும், ! உங்களையுந்தான்’ என்று ராஜப்பாவிடமும் கூறினாள்.

ஆமாம் ஆமாம். எல்லாரும் சேர்ந்து கேலி செய் யுங்கள்’ என்று கூறிய படி ஏதோ அவர் பேச நினைப் பதற்குள் பாகவதர் குறுக்கிட்டு, அது இருக்கட்டும்: முக்கியமான விஷயத்தை மறந்து விட்டேனே. ஹரிக்கு இந்த மாதம் வேலூரிலும், கரூரிலும் கச்சேரிக்கு முன் பணம் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் கேட்டிருக்கும் இந்த நாலைந்து தேதியிலும் உங்களுக்கு எந்தத் தேதி செளகரியம் என்று சொன்னால் ஹரி வந்ததும் பதில் எழுதிப் போடச் சொல்லுகிறேன்; என்ன சொல்லுகிறீர்கள்?’ என்று கேட்டார்.