பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரு தட்சணை 205

‘சொல்லுவதற்கு என்ன அண்ணா இருக்கிறது? வீட்டுக்குப் போனதும் முதற் காரியமாக டைரியைப் பார்த்து ராஜப்பாவையும் கலந்து கொண்டு விஷயத்தைச் சொல்லி அனுப்புகிறேன்” என்று சொல்லிப் பஞ்சு அண்ணா எழுந்தார். ராஜப்பாவும் கூடவே புறப்பட்டார்.

அவர்கள் போன பிறகு பாகவதரது மனம் மீண்டும் ஹரியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருத்தது.

  • தாயினும் சாலப்பரிந்து பல்லவியை அவனுக்கே தெரியாமல் அவன் எப்போது தயார் பண்ணினான்?அதைக் கேட்க வேண்டுமென்று நேற்றிலிருந்து நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஞாபகமே வரவில்லை. இப்போது கூட அவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ஒரு வேளை அடுத்தக் கச்சேரிக்கும் ஏதாவது புதுப் பல்லவி தயார் பண்ணுவதற்குத்தான் காவிரி மண்டபத்தைப் பார்க்கப்போய் விட்டானோ? என்று எண்ணினார்.

ஏனெனில் ஹரிக்கு ஆரம்பத்தி விருத்தே &l) சம்பந்தமான விஷயங்களில் அதிக விருப்பம் உண்டு. மிகவும் நெரடான ஸ்வரக் கோவைகளைக் கூட அநாயாச மாகப் பாடக் கூடிய திறமை அவனுக்கு இருந்தது. ஆனால், பாகவதருக்கு ஹரியை அந்த வழியிலேயே விட்டு விட விருப்பமில்லை. ஏனென்றால், சங்கீதம் சுகாதுபவத் துக்காக ஏற்பட்ட வித்தை. வண்ண மலரிலே மென்மை யும் மணமும் பொருந்தியிருப்பதே போல் இசையிலே ராகம், பாவம் தாளம் ஆகிய எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்து பரிணமிக்கவேண்டும். அதைக் காயகன் மறந்து, விவகாரத்திலேயே ஈடுபடத் தொடங்கி விட்டால், மலர் களின் இதழ்களைப் பிய்த்துப் பறக்க விடுவதே போல் பிறகு அவனுக்கு அதிலேதான் புத்தி போகும். சுகாது பவத்தை அவனும் மறந்து விடுவான்; அதுவும் நாளடை வில் தானாகவே அவனை மறந்து விடும். ஆகவே சிறந்த