பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 புல்லின் இதழ்கள்

அறுசுவை உணவில் ஒர் அம்சமாக லயமும் சோபிக்க வேண்டுமே தவிர, தெவிட்டும் பதார்த்தத்தைப் போல் சங்கீதத்தின் இனிமையையும் சுகத்தையும் மிஞ்சுகிற எந்த விவகாரமும் கச்சேரியில் இருக்கக்கூடாது என்பது பாகவதருடைய கொள்கை. அதையேதான் அவர் தம் கச்சேரிகளில் கையாண்டார். பாகவதருடைய கச்சேரியின் சிறப்பே அதுதான். அதில் நானாவித ருசியும், ரசமும் இருக்கும். மகாவித்துவான்கள் சபாஷ் போடும் அம்சமும், இளம் தலைமுறையினர் புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டிய விஷயமும் இருக்கும்; பாமர மக்களின் மனத்தைக் கவரும் அம்சமும் இருக்கும். இப்படி ஜனரஞ்சகமான கச்சேரிதான் பாகவதருடைய சிறப்பு. கச்சேரியில் வந்து உட்கார்ந்துவிட்டால் சற்றுக்கூட அலுப்புச் சலிப்புத் தோன்றாது.

நேரம் ஒடிக்கொண்டே இருந்தது. நாழிகை செல்லச் செல்லப் பாகவதருடைய மனம் ஹரியின் வருகையைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் வந்துவிடுவதாகச் சொல்லி வெளியே போனவன் ஏன் இவ்வளவு நேரமாகியும் காணவில்லை? எங்கே போயிருப் பான்? சுந்தரியும் வசந்தியும் ஊருக்குப் போகக் காத்திருக் கிறார்களே! ரெயிலேற்றி அனுப்பவாவது வருவானா? இம்மாதிரிச் சொல்லாமல் அவன் எங்கும் போன தில்லையே?

ஆனால், அவருடைய எண்ணத்துக்கும் ஊகங்களுக்கும் அப்பாற்பட்ட நிலையில், ஒரு தலை போகிற காரியத்தில்

ஈடுபட்டிருந்தான் ஹரி. ஆம்! அது அவனுக்கு ஒரு சுய கெளரவப் பிரச்சனை.