பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. அப்பாவின் ஆசை

விதி மனிதனை எதிர்காலத்தை நோக்கித்தான் இழுத்துச் செல்கிறது. இறந்த காலத்துக்குச் செல்ல அது அவனை அநுமதிப்பதில்லை. அந்த மகாசக்தியைப் பற்றி எண்ணிக்கொண்டே ஹரி நடந்தான். பாகவதர் அவனை முதல் நாளே ஊருக்குப் போய்ப் பெற்றோரை வணங்கி ஆசி பெற்று வா’ என்று அனுப்பினார். அப்போது அவன் அந்தக் குடும்பத்தைச் சென்று காண விரும்பவில்லை. ஆனால், தெய்வம் சோதனையைப் போல் அவனை மறுநாளே அந்தக் குடும்பத்தை நோக்கிக் கோலெடுத்து விரட்டியனுப்பிய விந்தையை எண்ணிக் கொண்டே அவன் அரசூரை அடைந்தான்.

ஹரி தன் வீட்டுக்குள் நுழைந்தபோது பெரியசாமி தன் மனைவியின் படுக்கைக்கு அருகில் குத் திட்டு உட்கார்ந்திருந் தான். சாணமிட்டு மெழுகிய தரையில், அங்கும் இங்கும் அழுக்குத் துணிகள் பரப்பிக் கிடந்தன, பெரியசாமி ஒருமுறை தன் எதிரில் நின்ற உருவத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

எத்தனை வருஷங்களுக்குப் பிறகு, எப்படி மாறு வேஷத்தில் வந்தால் என்ன, பெற்றவர்களுக்குப் பிள்ளை யைத் தெரியாமலா போய் விடும்?

நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் வீடு தேடி வந்திருக்கும் மகனைப் பெரியசாமிக் கிழவனும் முனியம்மாளும் அடையாளம் கண்டுகொள்ள எவ்விதக் கஷ்டமும் இருக்க வில்லை .