பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 புல்லின் இதழ்கள்

தீர்க்கத்தானோ என்னவோ, நிரந்தரமாக அவளுடனேயே வந்து தங்கி விட்டான். ஆனால் இப்போது முனியம்மா ளுக்கு அவன் முன் போலவே எங்காவது கண்காணாத சீமையில் இருந்தால் தேவலை போலிருந்தது.

பேசிக் கொண்டிருந்த போதே பெரிய பெண் திரெளபதி இரண்டு குவளைகளில் ஆவி பறக்கக் காபி என்ற பெயரில் ஒரு கரிய நிறப் பானத்தைக் கொண்டு வந்து எதிரில் வைத்து விட்டு ஒடப் போனாள்.

முனியம்மாள் அவளைக் கூப்பிட்டாள். என்னடி, ஒரேமுட்டா பாவலா எல்லாம் காட்டறே? இது யாருன்னு நெனைச்சுகிட்டு ஒடறே? அண்ணன் காலிலே வந்து விளுடி!’ என்று விரட்டினாள். உடனே திரெளபதி விழுந்து கும்பிட்டாள். பிறகு எழுந்து சற்று ஒரமாக நின்று கொண்டாள். வறுமை அந்த வீட்டை எப்படி ஆட்சி செய்து வருகிறது என்பதை அவனால் உணர முடிந்தது. தெருவாசலில், கூச்சலும் கும்மாளமும் போடும் குழந்தைகளையும் பார்த்தான். உறை கழற்றிய தம்பூரா மாதிரி இருந்த அவர்களது தேற்றம் அவன் கண்ணில் நீரை வரவழைத்தது.

என்ன தம்பி, காப்பியெக் குடிக்காமெ பார்த்துக் கிட்டே இருக்கே ஆறிப்போனா, இந்த இளவு காபி நல்லாவா இருக்கும்? சீக்கிரம் சூட்டோடு குடிச்சுடு’ என்று முனியம்மாள் துரிதப்படுத்தினாள். அப்போதுதான் ஹரிக்குத் தன் எதிரிலுள்ள காபியின் ஞாபகம் வந்தது. திரெளபதியின் பக்கம் திரும்பி, தங்கச்சி, எனக்கு வேண்டாம். நான் இப்போது வரும்போதுதான் குடித்து விட்டு வந்தேன். அப்பாவும் நீயும் குடியுங்கள். கொண்டு போ’ என்று ஹரி கூறியபோது, என்ன கண்ணப்பா, கொண்டு வந்த காபியை யாராவது திருப்பி அனுப்பு வாங்களா? உனக்குப் பிடிக்காவிட்டால் போகிறது: