பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 புல்லின் இதழ்கள்

பகம் ஜாஸ்தியாகிவிட்டது. அவருடைய சக்திக்கு மேலே பணம் தேவை போலிருக்கிறது: மாமா குறுக்கு வழியில் இறங்கிவிட்டார். நீ என்மீது வருத்தப்பட்டுப் பிரயோ சனம் இல்லை. நான் உண்மையைத் தான் சொல்லு கிறேன். மாமாவைப் போலிஸ் தேடுகிறது. அவரைப் பிடித்துக்கொண்டு போகப்போகிறார்கள். ஒரு திருட்டுக் கேஸிலே மாமா இப்போது சரியாக மாட்டிக் கொண்டா யிற்று. நான் இதைச் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்’ என்று கூறினான்.

போலிஸ்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் முனி யம்மாளுக்கு உடம்பெல்லாம் உலுக்கியது. பக்கிரிக்கும் உள்ளுற நடுக்கந்தான்; என்றாலும் அதை அவன் வெளிக்

குக் காட்டிக்கொள்ளவே இல்லை. ஆனால் கலவர மடைந்த முனியம்மாள், என்ன கண்ணப்பா, என்ன விஷயம்? கொஞ்சம் சீக்கிரமாச் சொல்லு’ என்று

பதற்றத்துடன் கேட்டாள்.

விஷயம் ரொம்ப முற்றிப் போய்விட்டது சித்தி. சற்று முன்பு மாமா கூடச் சொன்னாரே, கலெக்டர் எல்லாம் வந்ததாக. நேற்று அந்த பஜனை மடத்தில் என் கச்சேரி நடந்தது. ஒரே கூட்டம். கூட்டம் சேர்ந்தால் யாருக்குக் கொண்டாட்டம் என்று சொல்லவேண்டுமா?எந்தத் திருட்டுப் பயலோ கச்சேரி முடிந்து கூட்டம் கலைகிற போது ‘லபக் கென்று எங்கள் பாட்டு வாத்தியார் பெண்ணின் கழுத்திலே இருந்த நெக்லெஸை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டான். போலிசில் புகார் கொடுத் தாயிற்று. போலிசார் நேற்று ராத்திரிக்குள் ஜரூராக வேலை செய்து திருடனைப் பிடித்து உள்ளே அடைத்து வைத்திருக்கிறார்கள், ஆனால் நகை அவனிடத்தில் இல்லை. போலீசுக்கு அந்தக் கேடியைத் தெரியுமாம். அந்தக் கேடிக்கும் அல்லது திருட்டுக்கும் மாமாவுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குத் தெரியாது. ஆனால்