பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வாக்குறுதி

முனியம்மாளின் அழுகையையும் ஆர்ப்பாட்டத்தையும் கண்டு பயந்த பக்கிரி தன்னைச் சுதாரித்துக்கொண்டு, வெளிக்கு ஒன்றையுமே லட்சியம் செய்யாதவன் போல் காணப்பட்டான். பிறகு சற்றுக் கோபமாக, ‘எனக்கும் இந்தத் திருட்டுக்கும் என்ன அக்கா சம்பந்தம்? ஊரிலே எவனோ திருடினானாம்; எவனோ என்னைப்பத்திச் சொன்னானாம் போலீசு வந்துடுமாமே! போலீசைப் பத்தி எனக்குத் தெரியாதா அக்கா? கலெக்டர் இவனுக்கு வேண்டியவரா இருந்தா இவனோட, உள்ளார வரட்டுமே: ஒரு கை பார்க்கிறேன்!’ என்று ஹரியைப் பார்த்துக் கூறினான்.

உடனே ஹரி, சரி. நான் வருகிறேன் சித்தி. அகப் பட்டுக் கொள்கிறவரையில், எல்லாருமே இப்படித்தான் வீறாப்பாகப் பேசுவார்கள். இப்போது மாமன் பேசுகிற பேச்சைப் பார்த்தால், ஏதோ நானே கலெக்டரிடம் சொல்லிப் போலீஸை அனுப்பப்போவது போல் இருக்கிறது. எனக்கென்ன சின்னம்மா வந்துவிட்டது? நகையைப் பற்றி அவர்கள் ஒன்றும் கவலைப்பட்டுச் சாகவில்லை. அதைக் கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டியது போலீசின் பொறுப்பாகிவிட்டது. நான் அங்கே இருக்கிறவன். காதில் கேள்விப்பட்ட விஷயங்கள் உண்மையாகிவிட்டால் நம் குடும்பத்துக்குத்தானே அவமானம்; முடிந்தால் அதற்கு முன் தடுத்துப் பார்க்கலாம்’ என்றுதான் அவர்களிடங்கூடச் சொல்லர்மல் ஓடி வந்தேன். இனிமேல் என் பொறுப்பு முடிந்துவிட்டது. நான் வருகிறேன் சித்தி’ என்று எழுந்த