பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 புல்லின் இதழ்கள்

வழிங்கதான் இருக்கு. கொலை பண்ணனும், கறுப்புச் சந்தை; கள்ளக் கடத்தல் செய்யனும்: திருடனும் எனக்குத் திருட்டுத் தொழில் சுட்டுப் போட்டாலும் வராது. பாக்கிக்கெல்லாம் இந்தப் பட்டிக்காட்டிலே என்ன வேலை இருக்கு? கையிலே நான் சிங்கப்பூரிலே யிருந்து கொண்டு வந்த பணம் எல்லாம்; வந்த ஒரு மாசத்திலே தீர்ந்து போச்சு’ என்று பக்கிரி பேசிக் கொண்டு வந்த போதே, ‘அப்போ போன மாசம் என் கையிலே அம்பது ரூவா; அதுக்கு முன்னே எளுவத்தஞ்சு ரூவா கொண்டு வந்து கொடுத்தியே. அந்தப் பணம் எல்லாம்.?’ என்று முனியம்மாள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.

எல்லாம் பிக்பாக்கெட், திருட்டு இதிலேயெல்லாம் எனக்குக் கிடைச்ச கமிஷன்தான். ஆனால் நான் கையை நீட்டி ஒரு திருட்டுப் பண்ணல்லே.’

தூ! போரும்டா உன் பெருமையும் லட்சணமும்! விஷயத்தைச் சீக்கிரம் முடி’ என்று ஏதோ வரப் போகிற பெரிய ஆபத்தை எதிர்பார்த்து முனியம்மாள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கேட்டாள்.

“அதுதான் சொல்லிக்கிட்டே வறேனே அக்கா. நான் எனக்காக மட்டுமா இந்தக் காரியத்தையெல்லாம் செய்தேன்? ஏதோ பெரிய மனுஷன் மாதிரி உங்கிட்டே குந்திகிட்டு நியாயம் விசாரிக்கிறானே இந்தத் துரை, இது வரை இந்தக் குடும்பத்தைப் பத்தி நெனச்சுப் பார்த்திருக் கிறானா? நீயும் உன் குழந்தைகளும், வயசான அப்பனும் உசிரோட இருக்காங்களா - செத்துப் போயிட்டாங்க ளான்னு வந்து பார்த்திருக்கானா? இந்தான்னு ஒரு காலணாக் காசு நம்ம குடும்பத்துக்குக் கொடுத்து ஒத்தாசை பண்ணியிருப்பானா? இப்பக்கூடச் சொல்ல றேன்; இந்த நகையை இவன்கிட்டேச் சேர்த்துடறேன்.