பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சிலே முள் | 7’

தாலும் அவை பாய்ந்து உள்ளத்துள் செல்லத் தவற வில்லை. துக்கம் பெரும் உருண்டையாக அவன் நெஞ்சை அடைத்தது; அவன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை.

தான் இந்தப் புவியில் வந்த வழியையே எண்ணிக் கொண்டு சென்றவனுக்குக் காவிரிக்குச் செல்லும் வழியில் கவனம் இல்லை. கவனமில்லாமலே, பழகிப் போன கால்களை நம்பிச் சென்றான்.

துாரத்தில் சுழலிட்டு ஒடும் காவிரி கண்ணுக்குக் தெரிந்தது. அவனது எண்ணத் துரும்புகள் அலைக்கழி பட்டு அமிழ்ந்தும் மிதந்தும் போய்க் கொண்டிருந்தன.

எத்தனை முயன்றும் கயாத்திரியை அவனால் மறக்க முடியவில்லை. என்னிடம் காயத்திரி ஏன் இப்படி அன்பும் அக்கறையும் காட்டி, உடன் பிறந்த வளிடமே பேச்சு வாங்கிக்கொள்ள வேண்டும்? சுசீலா கூறுவதும் மெய்தானே? பணமும் பண்டமும் கொடுத்துப் பாட்டுச் சொல்லிக் கொள்கிற எத்தனையோ சிஷ்யர்கள் இருக்கிறபோது: தண்டச்சோறு போட்டுச் சங்கீதம் செல்லிக் கொடுப்பதோடு, தீவட்டித் துரைக்கு எண்ணெய்க் குளி ஒரு கேடா? என்னால் அவர்களுக்கு என்ன உபயோகம்? அவர்களின் குடும்பத்துக்கு என்ன ஆதாயம்? உபயோகம் இல்லாத என்னிடம் அன்பும் ஆதரவும் காட்ட யார்தாம் விரும்புவார்கள்? என்னிடம் இரக்கம் காட்டுகிறவர்களைக் கூடத் தண்டிப்பேன் என்று விதி கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும்போது, அதை இந்தக் காயத்திரியால் எதிர்த்து வெல்ல முடியுமா? எனக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும் அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்; நான் அப்படியே பழகிப்போனவன். ஆனால் என்னிடம் அன்பு செலுத்தும் குற்றத்துக்காக ஒருவர் துன்புறுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. எனக்காக யாரும் அநுதாபப்பட வேண்டாம். இதை. எப்படி, யார் காயத்திரிக்குச் சொல்லுவது? இதை எண்ணித்தான் அவன் மனம் குமுறினான்.