பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாக்குறுதி 227

வரச் சொல்லிவிட்டு ஆகாயத்தைப் பார்த்துக் கொண் டிருந்தான் ஹரி. மாலை ஆகியது; இருள் பரவிக் கொண்டே வந்தது. கொல்லைக்கும் வாசலுக்கும் அலைந்தான். ஹரியின் இந்தச் செய்கை காயத்திரிக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.

என்ன டீச்சர் ஸார், கொல்லையிலேயே இன்று சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று சுசீலா கூட ஒரு தடவை கேலியாகக் கேட்டு விட்டாள். யாரும் சந்தேகிக்க இடம் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும். அப் போதுதான், நகை கொல்லையில் கிடந்தது’ என்று சொல்லி எடுத்துக் கொடுத்தால் எல்லாரும் நம்புவார்கள் என்று திட்டமிட்டிருந்தான். ஆனால் இம்மாதிரியான காரியங்களில் அநுபவம் இல்லாததனாலும், ஒரு வேளை பக்கிரி சற்று முன்பே வந்து தன்னைக் காணாமல் ஏமாந்து போய்விடக் கூடாதே என்ற பரபரப்பினாலும் அவன் அடிக்கடிப் போய்ப் பார்த்து வந்தான்.

ஆனால் பக்கிரி உண்மையிலேயே ஏமாற்றிவிட் டான். கையெழுத்து மறையும் வேளையில் சரியாக அங்கே வந்து விடுகிறேன் என்று கூறியவன் இரவு மணி எட்டு ஆனபிறகும் வரவில்லை. சரியாக எட்டரை மணிக்குத்தான் வந்தான். அதுவும் வெறும் கையுடன் வந்து நின்றான். அந்தப் பார்ட்டி வெளியே போயிருப்பதாகவும் எப்படியும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத் துக்குள் கண்டிப்பாக வந்துவிடுவதாகவும் அவன் கூறவுமே ஹரிக்குத் தன்னையும் மீறி அழுகையும் கோபமும் மாறி மாறி வந்தன.

‘இந்தத் தகவலைச் சொல்லுவதற்குத்தானா இத்தனை நேரம்? பார்ட்டி எங்கே? புதுச்சேரிக்குப் போயிருக்கிறானா, பம்பாய்க்குப் போயிருக்கிறானா, சரக் குப் பிடிக்க?'