பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் கிடைத்தது 233

கிறது. சரி, விளக்கைச் சின்னதாக்கி விட்டுத் துரங்கு’ என்று கூறித் தானும் படுத்துக்கொண்டாள்.

காயத்திரியோடு போட்டி போட்டுக்கொண்டு குறைப் பொழுதுக்கும் தூக்கம் வராமல் அந்த வீட்டில் இன்னோர் உயிரும் தவித்தது. ‘கொல்லையில் போன காயத்திரி என்ன ஆனாள். அவள் தாயிடம் என்ன பதில் சொல்லப் போகிறாள். பக்கிரி அவள் கண்ணில் பட்டிருப்பானோ? இல்லை, சொன்னது போல் கன்றுக் குட்டியின் கழுத்தில் நெக்லெஸைக் கட்டிவிட்டு ஒடிப் போயிருப்பானா?” என்று எண்ணித் தவித்தான் ஹரி.

சாயங்காலமெல்லாம் அவன் கொல்லைப் பக்கம் சுற்றியதைச் சுசீலாவைப் போலவே, காயத்திரியும் கவனிக்கத் தவறவில்லை. இப்படி அவன் நடந்து கொள்கிற வழக்கமில்லை. என்றாலும் அதைப் பற்றிக் காயத்திரி அக்கறை கொள்ளாமல் விட்டுவிட்டாள். சுசீலா சி. ஐ. டி. போல் அவனுடைய செய்கை ஒவ்வொன்றையும் கண்காணித்து வந்தாள்.

ஆனால் யார் செய்த பூஜா பலனோ, இருட்டிய பிறகு அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே ஹரி கொல்லைப் பக்கம் சென்றதைச் சுசீலா கவனிக்கவில்லை. யாருடனோ அவன் பேசியதையெல்லாம் மறைந்திருந்து கேட்டவள் காயத்திரி தான். ஆனால், அதையே சுசீலா கேட்டிருந்தாள் வேறு வினையே வேண்டாம்!

இப்போது காயத்திரிக்கு மடியில் இருந்த நெக்லெஸ் பாராங்கல்லைவிட அதிகமாகக் கனத்தது. மாடு சத்தம் போட்டு அம்மாவையும் அவளையும் எழுப்பி அனுப்பியிரா விட்டால், யாருக்கும் தெரியாமல் நிச்சயம் ஹரிதான் அதைக் கன்றுக் குட்டியின் கழுத்திலிருந்து எடுத்திருப்பான். அதன் பின்னர் அதை என்ன செய்வான் அல்லது எப்படி

பு.இ.-15