பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 புல்லின் இதழ்கள்

இந்த வீட்டில் சேர்க்க நினைத்திருந்தான் என்பது அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் நேற்று அவர்கள் பேசிக்கொண்ட ரகசியம் இந்தக் கன்றுக் குட்டியின் கழுத்தில் நெக்லெஸைக் கொண்டு கட்டுகிற விஷயம்தான் என்பது அவளுக்குப் புரிந்தது.

அநேகமாக இன்றிரவு ஹரி துரங்கியிருக்கமாட்டான். எல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்கும்’ என்று காயத்திரி எண்ணியதற்கு ஏற்பவே கருக்கலில் அவள் எழுத்திருக்கும் போதே அவனும் எழுந்திருந்து பின்கட்டுக்குச் சென்றான்.

தொழுவத்துக்குள் நுழையப் போன ஹரியைக் காயத்திரி மெதுவாகக் கூப்பிட்டாள். ‘வீணாக அங்கே போய்த் தேடாதே! நான் ராத்திரியே கழற்றிக் கொண்டு வந்து விட்டேன். இந்தா என்று இடுப்பிலிருந்த நெக்லெஸை எடுக்கப் போனாள்.

ஹரி உடனே, எடுக்க வேண்டாம் அக்கா. அது கொல்லையில் கிடந்தது என்று வீட்டில் சேர்ப்பித்து விடுங்கள். எனக்காக இந்த உதவி செய்ய வேண்டும். பிறகு உங்களுக்கு நான் எல்லா விஷயங்களையும் விரிவாகச் சொல்லுகிறேன்’ என்று அவன் சொல்லி முடிக்கு முன்னர், நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். எல்லா விஷயமும் எனக்கும் தெரியும் என்பதே போல் காயத்திரி அவனைப் பார்த்தாள். ஆனால் ஹரிக்கு அவளை அப்படி விட்டுவிட விருப்பமில்லை. இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று, காரியதரிசி மூலம் கேள்விபட்டதிலிருந்து, பக்கிரி முன்னிலையில் சத்தியம் செய்து கொடுத்தது, நகையை மீட்க ஏற்பாடு செய்தது வரை, அத்தனையும் விளக்கமாகவும் சுருக்கமாகவும் சொல்லி காயத்திரிக்குத் தான் நிரபராதி என்பதைப் புரிய வைத்து விட்டான். பிறகுதான் கவலையை மறந்து தம்பூராவை எடுத்து வைத்துக் கொண்டு ஆனந்தமாகப் பாட உட்கார்ந்தான்.