பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் கிடைத்தது 235

பொழுது விடிந்து வெகு நேரமாகிவிட்டது. சோம்பல்

முறித்துக் கொண்டே எழுந்த சுசீலா, என்ன டீச்சர் ார், இன்று சாதகம் எல்லாம் அமர்க்களமாக இருக்கிறது. வேலூர்க் கச்சேரியா?’ என்று ஹரியிடம் விண்டலாகப் பேசியபடியே கையில் பற்பொடியைக்

கொட்டிக் கொண்டு கிணற்றங்கரையை நோக்கிப் (J, Si.

சற்றைக்கெல்லாம், அம்மா’ என்று கொல்லை யிலிருந்து கத்திய சுசீலாவின் பலத்த குரலைக் கேட்டு, அடுக்களையில் பால் காய்ச்சிக் கொண்டிருந்த லட்சுமி யம்மாள் என்னவோ ஏதோ என்று புழக்கடையை நோக்கி ஒடினாள். ஹரி பாடுவதை நிறுத்திவிட்டுக் காதைத் மீட்டிக் கொண்டான். காயத்திரி குளியல் அறையிலிருந்து வெளியே வரவேயில்லை.

சுசீலா இடக்கையில் காணாமற் போன நெக்லெஸைத் தாக்கிப் பிடித்துக் கொண்டு, அம்மா! இது நான் பல் தேய்க்கிற இடத்திற்கருகில் கிடந்தது அம்மா’ என்று ஆச்சரியத்துடன் நீட்டினாள். லட்சுமியம்மாள் சட் டென்று பெண்ணின் கையிலிருந்த நெக்லெஸை வாங்கிப் பார்த்தாள். இது உன்னுடைய நெக்லெஸ்தானேடி?’ ான்றாள் ஆச்சரியத்துடன்.

“ஆமாம். அம்மா!’

இது இங்கே எப்படி வந்தது?”

  • அதுதானம்மா எனக்கும் தெரியவில்லை. தொட்டி. யிலிருந்து ஜலம் எடுக்க குனிந்தேன். பக்கத்திலே பளபள’ ான்றது. எடுத்துப் பார்த்தேன்; என்னுடைய அதே நெக்லெஸ்.”

‘அறுத்துக் கொண்டு போனவனே கொண்டு வந்து பொட்டு விட்டானா? அதுதான் ராத்திரியெல்லாம் பசு