பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 புல்லின் இதழ்கள்

போய் அப்பாவிடம் நெக்லெஸ் கிடைத்துவிட்டதைக் கூறினாள்.

பாகவதர் மனத்துக்குள் வியந்து கொண்டார். அதற் குள் சுசீலா, என்னப்பா இவ்வளவு சந்தோஷ சமா சாரத்தைச் சொல்லுகிறேன்; நீங்கள் ஒன்றுமே பதில்பேச வில்லை? என் நகை திரும்ப கிடைத்துவிட்டதில் உங்களுக் குச் சந்தோஷத்தையே காணோமே?’ என்று அலுத்துக் கொண்டாள்.

பாகவதர் அவளையும் அருகிலிருந்த லட்சுமியம்மா ளையும் பார்த்து, நகையைத் தொலைத்து விட்டு வந்த

தற்காக உன்னை நான் கொபித்துக் கொண்டால் அல்லவா, கிடைத்துவிட்டதற்காகப் பாராட்ட பிரா னனை விட்டுப்பாடி, உழைத்துச் சம்பாதித்த காசு.

தெய்வம் என்று ஒன்று இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது. அது தெருவில் காணாமற் போனதைக் கொல்லையிலே கொண்டு வந்து போட்டு சத்தியத்தைக் காப்பாற்றுகிறது. இதற்கு உன்னை நான் புகழ்ந்து மாலை போட வேண்டுமா?” என்று பாகவதர் கூறியபோதே, அண்ணா’ என்று அழைத்துக் கொண்டு காரியதரிசி உள்ளே வந்தார்.

‘'இப்போது நான் வரும்போது செல்லிக்கொண் டிருந்தீர்களே, அது லட்சத்தில் ஒரு வார்த்தை. சத்தியம் என்று ஒன்று உலகத்தில் இன்னும் உயிரோடு இருக்கத்தான் செய்கிறது. அதை யாராலுமே மறைக்க முடியாது

அண்ணா’ என்று அவர் கூறியபோது, ‘இல்லையா பின்னே? நாம் ஒருவருடைய சொத்துக்கு அநியாயமாக ஆசைப்படாமல் இருந்தால், பகவான் நம்முடைய

சொத்தை இன்னொருவன் விரலாலே தொடப் பார்த்துக் கொண்டிருப்பானோ?அதைத்தான் இப்பொழுது சொல்லிக் கொண்டிருந்தேன்’ என்றபடி சுசீலாவின் பக்கம் திரும்பி.