பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் கிடைத்தது 239

“சுசீலா, என்னிடம் வந்து சொன்னாயே, அதை இவரிடம் அல்லவா முதலில் சொல்ல வேண்டும். சொல்லு’ என்றார் பாகவதர். என்ன அண்ணா லிஷயம்?’ என்று காரிய தரிசி ஆச்சரியத்துடன் கேட்டார்.

என்னுடைய நெக்லெஸ் கிடைத்துவிட்டது மாமா. இன்று காலையில் கொல்லைப்புறம் போனேன். கிணற்றடி யிலே கிடந்தது’ என்று சுசீலா கொடுத்தாள்.

அதை ஆச்சரியத்துடன் வாங்கிப் பார்த்துக்கொண் டிருந்தபோது பாகவதர், நகைதான் கிடைத்துவிட்டதே, காரியதரிசியிடம் சொல்லிப் போலீஸில் புகார் கொடுத் திருப்பதை வாபஸ் வாங்கச் சொல்லலாமா?’ என்று ஹரி கேட்டான். அதற்குள் நீங்களே வந்துவிட்டீர்கள். ஆமாம், நீங்கள் வந்த விஷயத்தைக் கூறவே இல்லையே?’ என்று கேட்டார்.

ஒன்றுமில்லை அண்ணா. நெக்லெஸ் விஷயமாகப் போலீஸ் ஒருவனைப் பிடித்து வைத்திருப்பதாகச் சொன்னேன் அல்லவா? அவன் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சாதிக்கிறான். போலீஸ் இன்னும் எங்கெல்லாமோ தேடிக்கொண்டிருக்கிறார்கள். நல்ல வேளையாக நமக்குப் பொருள் கிடைத்துவிட்டது முதல் காரியமாகப் போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கி விடுகிறேன்’ என்று கூறிப் புறப்பட்டார்.

மளமளவென்று பொழுது ஏறிக்கொண்டே போவது போல் ஹரியும் பிரபலமாகிக்கொண்டே வந்தான். ஆயினும் சுந்தரி அவனைப் புகழ்வதை நிறுத்தவில்லை.

‘நீ அன்று பஜனை மடத்தில் பாடியபோது, உன் குருவினுடைய அந்த நாட்கள்தாம் என் நினைவுக்கு வந்தன. குரலைக்கூடக் கடவுள் உனக்கு அவரைப்

போலவேதான் கொடுத்திருக்கிறார். அன்று நீ பாடிய