பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் கிடைத்தது -- 241.

விட்டாய் போலிருக்கிறது’ என்று சுந்தரி வேடிக்கையாகக் கூறியபடி ஹரியிடம் தம்பூராவைக் கேட்டாள்.

உடனே ஹரி பரவாயில்லை. இன்று எனக்கு இந்தப் பாக்கியமும் கிடைக்கட்டும்; நானே போடுகிறேன். நீங்கள் பாடுங்கள்’ என்றான்.

உடனே சுந்தரியும் எவ்வித மறுப்பும் கூறாமல் கணி ரென்று பாட ஆரம்பித்தாள். எத்தனை நாட்களுக்குப் பிறகு உட்கார்ந்து பாடப் போகிறோம் என்று சுந்தரி முதலில் தயங்கினாள். ஆனால் பாடப் பாட தயக்க மெல்லாம் தானாகவே சுந்தரியை விட்டு விலகின. ‘தான் பாடுவதை விட்டாலும், பாட்டு தன்னை விடாமல் - விலகாமல் - பற்றிக் கொண்டுதான் இருக்கிறது; நாம் நன்றாக முன் போலவே பாடுகிறோம் என்பது அவளுக்கே புரிந்தது. மனத்தில் மேலும் மேலும் உற்சாகம் பிறந்தது. சுந்தரி தன்னை மறந்து பாடினாள்.

அன்று சுந்தரி தனக்குப் பிடித்தமானவைகளாகப் பாடினாள்; பாகவதருக்குப் பிடித்தமானவைகளையும் பாடினாள்; பிறகு ஹரி கேட்டதையெல்லாம் பாடிக் கொண்டேயிருந்தாள். கல்யாணியை அவள் பாடிக் கேட்ட பிறகு ஹரிக்கே, இதுவல்லவா கல்யாணி குரு நாதருடைய வித்வத் திறமை இங்கேயல்லவா பிரகாசிக் கிறது? தாயாரிடம் இருக்கும் இத்தனை பெருமைகளும் தெரியாமலா வசந்தி என்னிடம் பாட்டுச் சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டாள்? இத்தனை நாளும் என் னுடைய பாட்டைக் கேட்டு சுந்தரி என்ன நினைத்துக் கொண்டிருப்பாளோ?’ என்று ஹரி சிந்தனையில் ஆழ்ந் திருந்தான்.

என்ன ஹரி, தூக்கம் வருகிறதா? பாதியில் பாதியில் மீட்டுவதை நிறுத்தி விடுகிறாயே’ என்று சிரித்தபடிக் கூறிய சுந்தரி எழுந்து கொண்டே “சரி.