பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. வீண் பழி

ஹரியினுடைய மனம் ஒரேயடியாகக் குழம்பிப் போயிருந்தது. தன்னை வசந்தி விரும்புகிறாள் என்பதை அவளுடைய பேச்சினாலும் செயல்களினாலும் ஹரி யூகித்து வைத்திருந்தான். ஆனால், அதற்கு அநுசரணை யாகவோ அல்லது அவள் எண்ணத்தை வளர்க்கும் முறை யிலோ அணுவளவுகூட இடம் கொடுக்காமல் அவன் மிகவும் ஜாக்கிரதையாகவே நடந்துகொண்டான். அதே சமயம் தன் உள்ளத்தில் அது போன்ற நினைவுகளுக் கெல்லாம் இடமில்லை என்பதையும் அழுத்தமாகச் சுட்டிக் காட்டத் தவறியதில்லை.

ஆனால், மகளின் விருப்பமே தாயின் விருப்பமும் என்று அறிந்ததும்தான், ஹரிக்குத் துாக்கி வாரிப் போட்டது. தன்னையும் வசந்தியையும் இணைத்து இணைத்துப் பேசிய பேச்சுக்களைக் கேட்டு, அவன் மனம் கலங்கிப் போனான். தனக்கு விருப்பமில்லாத ஒரு விஷயத்தைப் பற்றிச் சுந்தரிக்கு எதிராகச் சொல்ல வேண்டி வந்து விடுமோ என்று அஞ்சினான். அந்தக் கவலையைச் சுமந்து கொண்டே ஹரி ரெயில் ஏறினான்; ரெயிலிலிருந்தும் இறங்கினான்.

சுவாமிமலையில் காலடி வைத்தவுடனே ஹரியின் மற்றக் கவலைகள் எல்லாம் பறந்துவிட்டன. ஆனால் அதே சமயம் புதிய கவலை அவனை ஆட்கொண்டது.

ஹரி வீட்டை அடையும்போது, லட்சுமி அம்மாள் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். ஹரி உள்ளே போக