பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 புல்லின் இதழ்கள்

வழியில்லாமல் சுசீலா வாசற்படியை மறைத்தவண்ணம் நின்றிருந்தாள்.

இதைப் பார்த்துவிட்டு, வழியை விடேண்டி அவனுக்கு உள்ளே போக’’ என்று சுசீலாவை அதட்டி னாள் லட்சுமியம்மாள்.

சுசீலாவின் முகம் கோபத்தினால் வீங்கிப் போயிருந் தது. உள்ளே நுழைந்த ஹரியைத் தொடர்ந்து அவளும் வேகமாக உள்ளே சென்றாள். போகும் போதே பெண் னிடம், ஹரிக்குச் சாதம் போடுமாறு திண்ணையில் இருந்தபடி லட்சுமியம்மாள் குரல் கொடுத்தாள். ஆனால் சுசீலா அதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

ஹரி வந்துவிட்டதைக் காயத்திரி அப்போதுதான் கவனித்தாள். பாகவதர் ஹரியைக் கண்டதும் திருவிடை மருதுாரிலுள்ள யோகrேமங்களை விசாரித்துத் தெரிந்து கொண்டார். அதற்குமேல் அவனை அவர் ஒன்றும் கேட்க வில்லை. பாகவதருக்கு ஹரி எங்கிருந்தாலும் ஒன்றுதான். இரண்டுமே அவர் வீடுதாமே?

ஆனால் சுசீலா விடவில்லை. பின்னாலேயே சென்ற வள், ஹரியை, இன்றைக்கும் அங்கேயே தங்கிவிட்டு மெதுவாக வருகிறதுதானே? இப்போது இங்கே என்ன அவசரம்?’ என்று கேட்டாள்.

ஹரி ஒன்றும் பதில் பேசவில்லை. ஆனால் சுசீலா விடாமல், உங்களைத்தான் கேட்கிறேன். நேற்றுக் காலை யில் திருவிடைமருதுரருக்குப் போய் இன்று இவ்வளவு நேரம் வரை அங்கே என்ன செய்தீர்கள்?’ என்று கேட்டாள்.

  • பாடம் சொல்லிக் கொடுக்கப் போனேன். பாட்டுச்
  • _ I. F.

சொல்லிக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன்’ என்றான் ஹரி,