பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீண் பழி 24.7”

“நான் சொல்லுகிறேன்; நீங்கள் பாட்டுச் சொல்லிக் கொடுக்கப் போகவில்லை. அதற்கு இரண்டு நாளா?

“நீ எது வேண்டுமானாலும் சொல்லலாம். நான் அதற்காகத்தான் போனேன். போன வாரம் முழுவதும் பாடமே எடுக்கவில்லை. அடுத்த வாரமும் ஒய்வு இருக் காது. அதனால்தான் இரண்டு நாள் சேர்ந்தாற்போல் பாடம் எடுத்தேன்.”

சுத்தப் பொய். வசந்தியுடன் அரட்டை அடிப் பதற்காகவே நீங்கள் இங்கிருந்து போயிருக்கிறீர்கள். நீங்கள் ஊர் ஊராய்க் கச்சேரி செய்த பெருமையை எல்லாம் அவர்களிடம் பீற்றிக் கொள்ளப் போயிருக் கிறீர்கள். அவர்கள் அம்மாவும் பெண்ணுமாக, “ஆஹா ஒஹோ’ என்று உங்களைப் புகழ்ந்தவுடன் கண்மண் தெரியவில்லை. அங்கேயே சுற்றிக் கொண்டு இருந்து விட் டீர்கள். இல்லாவிட்டால், எனக்குந் தானே அதே போல் பாடம் எடுத்து நாளாயிற்று. உட்கார்ந்து அரைமணி எனக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?”

ஹரி ஜிவு ஜிவு’ என்றிருக்கும் அவளுடைய முகத்தை உற்றுப் பார்த்தான். கோபத்திலும் அவள் அழகாகவே இருந்தாள். மிகவும் தணிவான குரலிலேயே அவன் பேசினான்:

சுசிலா, நானா உனக்குப் பாடம் எடுக்கமாட்டேன் என்றேன்? நீதானே நாக்கில் புண் இருக்கிறது, பாட முடியவில்லை என்று சொன்னாய்? ஆனால் இப்போது நன்றாய் ஆறிவிட்டது என்று நினைக்கிறேன்.’

  • எப்படி?’’

‘இல்லாவிட்டால் உன்னால் இப்படித் துரித காலத்தில் பேச முடியுமா?’’