பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 புல்லின் இதழ்கள்

மறுநாள் காலையில் தவறாமல் காந்தாமணியின் வீட்டிலிருந்து கார் வந்துவிட்டது. முதல்நாள் கச்சேரி முடிகிறவரை இருந்த காந்தாமணியும், அவள் தாயாரும் ஹரியை, மறுநாள் தங்கள் வீட்டில்தான் சாப்பிட்டாக வேண்டும் என்று உரிமைாயாடு கூறியபடியால் அவனும் மறுக்க முடியாமல் ஒப்புக் கொண்டான்.

வீடு என்று அழைக்கப்படும் காந்தாமணியின் அரண்மனை போன்ற பங்களாவினுள் ஹரி நுழையும் போதே பிரமித்துப் போனான். காந்தாமணியின் தாயார் ஹரியை வரவேற்று நடுஹாலில் போட்டிருந்த சோபாவில் அமரச் செய்தாள். பிறகு இதோ, வரு கிறேன்’ என்று அவசரமாக உள்ளே சென்றாள். ஹரி எழுந்து அந்த அழகிய ஹால் முழுவதும் நோட்டம் விட் டான். அழகிய பூனை ஒன்று அறை முழுவதும் உரிமை யுடன் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.

தவழும் குழந்தையிலிருந்து, பருவப் பெண்ணாகத் திகழும் அன்று வரையில் காந்தாமணியின் பற்பல விதமான புகைப் படங்கள் சுவரில் அழகாகத் தொங்கின. அந்தப் படங்களை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஹரி, “எல்லாம் என்னுடைய படங்கள்தாம்’ என்ற குரலைக் கேட்டுத் திரும்பினான்.

முத்துக்கள் மின்ன, சிரித்தபடியே கையில் காபியுடன் காந்தாமணி அவன் எதிரில் வந்து நின்றாள்.

‘உங்கள ைரொம்ப நேரம் காக்க வைத்து விட்டதற்கு மன்னிக்க வேண்டும்’ என்று காபியை ஹரியிடம் நீட்டி னாள் அவள்.

கைநீட்டிக் காபியை வாங்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாமல் ஹரி காந்தாமணியின் முகத்தையே பார்த்தான்.