பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு ஆராய்ச்சி 257

மலரின் மென்மையும், பொன்னின் நிறமும், மின்ன வின் ஒளியும் தென்றலின் நளினமும் பெற்ற தேவமகள் போல் அவள் காட்சியளித்தாள். பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் அழகைப் பாராதவன் ரசிகனாக இருக்க முடியுமா? - ரசிகத்தன்மை இல்லாதவனிடம் கலைத் தன்மை இருக்குமா? கலைத் தன்மை இல்லாதவனைக் காந்தாமணி கண்ணெடுத்துப் பார்ப்பாளா?

இந் தாருங்கள், காபி. எவ்வளவு நாழிகையாகக் காத்திருக்கிறேன்? ஆறிப்போய்விடாதா?’

ஹரிக்குச் சூடுபட்டது, ‘'ஆறிப் போனால் போகிறது. கையை வலிக்காதா?’’ முதல் தடவையாக ஹரி உளறினான்.

பூனை மியாவ் என்று பதில் குரல் கொடுத்தது.

கையிலிருந்த காபியைப் பார்த்தபடி, காந்தாமணியின் அழகை சுவைத்த ஹரி பதில் கூறு முன்னர், ‘நேற்று நீங்கள் பாடிய பாட்டு இன்னும் என் காதுகளில் ரீங்காரம் செய் றெது லார். முந்தாநாள் நானும் அம்மாவும் தெப்பம் பார்க்க வந்திருந்தோம். கச்சேரி முடிந்து உங்களைப் பார்த்து, அம்மாவைக் கொண்டாவது பாராட்டிவிட்டு வந்தால்தான் என் மனம் சமாதானம் அடையும் போலி ருந்தது. ஆனால் அந்தக் கூட்டத்தில் அம்மாவினால் அது எப்படி முடியும்.’’ காந்தாமணி குறைப்பட்டுக்

கொண்டாள்.

அதனாலென்ன? பரவாயில்லை. அதுதான் இப் போது வட்டியும் முதலுமாகப் புகழ்ந்து தள்ளி விட்டீர் களே’ என்றாள் ஹரி.

நீங்கள் திருச்சியிலிருந்து எப்போது திரும்புவீர்கள்?” என்று காந்தாமணியின் தாயார் கேட்டாள்.