பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 புல்லின் இதழ்கள்

ஏன்? கச்சேரி முடிந்ததும் மறு ரெயிலிலேயே புறப் பட வேண்டியதுதான். எனக்கு அங்கே வேற என்ன வேலை?’ என்றான் ஹரி.

அப்போ சரி, பஞ்சாங்கம் தருகிறேன். ஒரு நல்ல நாள் பாருங்கள். நீங்கள் திருச்சியிலிருந்து வந்ததுமே இவளுக்குப் பாடம் ஆரம்பித்து விட வேண்டும். மாசம் நீங்கள் கேட்டதைத் தந்து விடுகிறேன். அப்போதுதான் இவள் வாய் ஒயும்’ என்ற காந்தாமணியின் தாயார்

சுவரில் மாட்டியிருந்த பஞ்சாங்கத்தை ஹரியின் கையில் கொடுத்தாள்.

ஹரிக்குத் திக் கென்றது. இவற்காகவா இத்தனை பூர்வ பீடிகையும் உபசாரமும்? ஹரி யோசனையில் ஆழ்ந்தான்.

கண்கள்தாம் பஞ்சாங்கத்தில் பதிந்திருந்தனவேயன்றி, மனம் குருநாதரையே சுற்றியது.

-தாயாரும் பெண்ணுமாகக் காரைப் போட்டுக் கொண்டு சுவாமி மலைக்கு வந்ததும், இதே காந்தா மணிக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கத் தன் குருநாதர் மறுத்ததும், அவர்கள் மனமுடைந்து வெளியேறியதும் அவன் மனத்திரையில் நிழற்காட்சிகள் போல் ஓடின.

குருநாதருக்குத் தெரிந்தால் அவர் இதற்கு ஒப்புக் கொள்வாரோ மாட்டாரோ: ஆனால் இந்தச் சமயத்தில் பணத்தின் தேவை எவ்வளவு முக்கியமாக இருக்கிறது. இன்னும் அவர் குணமாக எத்தனை மாதம் ஆகிறதோ! அதுவரை கச்சேரியை மட்டும் நம்பிக் கொண்டிருக்கலாமா? அப்படியே தனக்குக் கச்சேரிகள் வந்தாலும் தேவை அதை விட அதிகமாக அல்லவா இருக்கிறது. இப்படியொரு நிரந்தர வருமானத்துக்கு வழி செய்துகொண்டால், மனத் துக்கு நிம்மதியாக இருக்குமல்லவா?