பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு ஆராய்ச்சி 259

“என்ன சார், எனக்கு என்றவுடன் பஞ்சாங்கத்தில் நாள்கூட அகப்படமாட்டேன் என்கிறதா? ரொம்ம நேர மாகப் பார்க்கிறீர்களே?’ காந்தாமணி கலகலவென்று நகைத்தபடிக் கேட்டாள்.

பஞ்சாங்கத்தில் நாளுக்கென்ன பஞ்சம்? யாருக்கு வேண்டுமானாலும் கிடைத்துவிடுகிறது. எனக்குத்தான் வந்து சொல்லிக் கொடுக்க முடியுமா என்று யோசிக் கிறேன்’ என்றான் ஹரி.

‘பாரம்மா, கடைசியில் இவர் சொல்லுகிறதை’ காந்தாமணி இரைந்து தாயாரிடம் முறையிட்டாள்.

நீ சும்மா இரம்மா. நான் பார்க்கிறேன்’ என்று உள்ளே சென்ற காந்தாமணியின் தாயார் மறு நிமிஷம், ஒரு தட்டு நிறைய வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பங் களை வைத்து எடுத்துக் கொண்டுவந்து பெண்ணின் கையில் கொடுத்தாள். அதைக் கையில் பெற்றுக் கொண்ட காந்தாமணி. ஹரியின் பாதத்தில் வைத்து வணங்கி எழுந் தாள.

ஹரி திடுக்கிட்டு எழுந்தான். இதெல்லாம் என்ன காந்தாமணி? எழுந்திரு. நான் என்ன, சொல்லிக் கொடுக்கமாட்டேன் என்றா சொன்னேன்? ஆனால் எதற் கும் என் குருநாதரிடம் ஒரு வார்த்தை கேட்காமல் ஒப்புக் கொள்ளலாமா? இன்று திருச்சி கச்சேரி முடிந் ததும் ஊருக்குச் சென்று எல்லா விபரத்துக்கும் உங் களுக்கு எழுதுகிறேன்’ என்றான்.

உடனே காந்தாமணி கேட்டாள்: ‘ குருகூடாது

என்றால், நீங்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்த மாட்டீர் கள் இல்லையா? ‘’

‘எப்படியாவது உனக்கு நான் பாட்டுச் சொல்லிக் கொடுக்க முயற்சி செய்கிறேன்; போதுமா?"