பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 புல்லின் இதழ்கள்

  • முயற்சி செய்தால் போதாது. நிச்சயமாகச் சொல்லித் தரவேண்டும்.’

சத்தியம் வேண்டுமானால் செய்து தரட்டுமா’’. ஹரியினுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டதும் காந் தாமணியின் உள்ளத்தில் நம்பிக்கையும், அதே சமயம் நாணமும் படிந்து அவளது முசும் குங்குமம் போல் சிவந்தது.

ஹரி, சுவரிலிருந்த கடிகாரத்தை ஏறிட்டுப் பார்த்ததும், *சத்திரத்துக்குப் போய் சாமன்களை எடுத்து கொண்டு புறப்படுவதற்குத்தான் நேரம் இருக்கும் போலிருக்கிறது’

என்று புறப்பட்டான்.

காந்தாமணியின் தாயார் ஒரு பையில் தட்டிலிருந்த சாமான்களை யெல்லாம் போட்டுக் காரில் கொண்டு வந்துவைத்து, டிரைவரிடம், ‘இவரைக் கூட இருந்து பத்திரமாக ரெயில் ஏற்றிவிட்டு வா, கோபால்’ என்று உத்தரவிட்டாள்.

கார் புறப்படும்போது காந்தாமணி வாசற்படிவரை வந்து வழி அனுப்பினாள்.

சத்திரத்திலிருந்த பெட்டி படுக்கைகளை எல்லாம் கோபால் காரில் ஏற்றிவிட்டான். தம்பூராவைக் கையில் எடுத்துக்கொண்டு அறையைப் பூட்டப்போன ஹரி மறுகணம் திடுக்கிட்டுத் திரும்பினான். வாசற்படியினருகில் பக்கிரி நின்றுகொண்டிருந்தான்.

இங்கே எங்கே வந்தாய்?’ என்று ஹரி சற்று அதிருப்தியோடு கேட்டான்.

மாரியம்மன் கோவிலுக்கு வந்தேன். அப்படியே உன்னை அ க்காவும் பார்த்துட்டு வரச் சோல்விச்சு. பாத்துட்டுப் போகலாம்னும் வந்தேன்.""