பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு ஆராய்ச்சி 261

‘நான் இங்கே இருக்கேன்னு உனக்கு f சொன்னது?”

ஒருத்தர் சொல்லணுமா? மானேஜர் ரூம்மே போய் போர்டைப் பார்த்தா, தானே வந்துபோனவங்க பேரு தெரியுது. இங்கே இல்லேன்னா திருச்சிக்குப் போயிட் டேன்னு நினைச்சுக்கறேன்.’

‘ஒகோ, அதுவுங்கூட உனக்குத் தெரியுமா? ஆமாம், கச்சேரியை எண்ணிக் கொண்டிருந்தால்தானே பங்கு வாங்க முடியும்? ஏராளமாய்ச் செலவு செய்து என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் இல்லையா!’ s

“இந்தா ஹரி, நீ இப்படி ஏதோ எனக்கு இனாம் கொடுக்கிறாப் போலே ஒவ்வொரு வாட்டியும் பேசற தானா, இந்த வசூல் பண்ற வேலை எனக்கு வேணாம். முடியாதுன்னு அக்காகிட்டேயே கண்டிச்சுச் சொல்லிப் பிடறேன். ஏதோ அது சாப்பாட்டுக்கு இல்லேன்னு சொல்லி அனுப்பிச்சு: நான் வந்தேன்,’

“மாமா, இப்படி நீ என்னிடம் பேசுவதால் ஒரு பிரயோசனமும் இல்லை. கச்சேரிக்குப் போய்ப் பாடு வதற்கு முன்னாலேயே பணத்துக்கு வந்து நின்றால் நான் எங்கே போவேன்? மாரியம்மன் கோயிலில் நான் பணத்துக் காகப் பாடவில்லை; பிரசாதத்துக்குத்தான் பாடினேன். அது எனக்குப் பணத்துக்கு மேலே பெரிசு. வீட்டிலே பசி என்றால் இந்தப் பழங்களையெல்லாம் சாப்பிடட்டும், கச்சேரிக்குப் போய் வந்த பிறகு வா; ஏதாவது தருகிறேன். இம்போது என்னிடம் காலணா கிடையாது’ என்று கூறிக் கொண்டே ஹரி, காந்தாமணி வீட்டில் கொடுத்த பழங்களை எல்லாம் பக்கிரி நீட்டிய துண்டில், இந்தா’ என்று தலைகீழாகக் கொட்டினான்.

ஆனால் அதே சமயம், பையிலிருந்த அந்தப் பழங்க ளுக்கு மத்தியிலிருந்து, இரண்டு நூறு ரு பாய் நோட்டுக்