பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. நல்ல முடிவு

திருச்சிக்குப் போகிற வழியெல்லாம் ஹரி காந்தா மணியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். அது அவனுக்கே ஆச்சரியமாகத் தோன்றியது. மானின்மிடுக்கும், மயிலின் ஒயிலும் கூடிய காந்தாமணியின் நளினம் அவன் கருத்தைக் கவர்ந்து ரசிகத் தன்மையைத் தூண்டிவிட்டது. வசந்தியிடமும் சுசீலா விடமும்-ஏன், அவன் சந்தித்த மற்ற எந்தப் பெண்களிடமும் கண்டறியாத-ஏதோ ஒருவிதக் கவர்ச்சி அவனை அவளிடம் இழுத்தது.

காந்தாமணிக்குப் பாட்டுச் சொல்லிக்கொடுக்க, குருநாதர் அநுமதிக்கிறாரோ இல்லையோ என்கிற பெரும் கவலை அவள் மனத்தில் எழுந்தது. ஆனால் அதையும் மீறி எப்படியாவது காந்தாமணிக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டதை அவன் எண்ணிப் பார்த்தான்.

பையில் பழத்தைப் போட்டு நிரம்பிக் கொடுத்தவர் கள்; அதில் இத்தனை பணத்தையும் போட்டிருப்பார்கள் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள்? ஒரு வேளை அந்தப் பணம் தவறுதலாகப் பழத்துடன் வந்துவிட்டதோ அப்படி இருந்தால அது திருப்பிக் கொடுக்க வேண்டிய பணம் அல்லவா? தெரியாமல், இப்படிப் பக்கிரியின் முன் பையைத் தலைகீழாகக் கொட்டி, திருட்டுப் பயலின் வாயால் திருட்டுப் பட்டம் வேறு வாங்கிக் கட்டிக் கொள்ளும்படி ஏற்பட்டுவிட்டதே என்று மனம் வருந் தினான்.