பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சுழல் 21

பன் மிகவும் மகிழ்ச்சியுடன் விளக்கும் தலையுமாகக் காட்சி யளித்தான். அநுபவப்பட்ட மற்ற விளக்குக்காரர்கள் துரங்கி வழிந்தாலும், கண்ணப்பன் இமை கொட்டாமல் ஆர்வத் துடன் கசசேரிக்கு மத்தியில் கடமையைச் செய்துகொண்டி ருப்பான். அவன் மீது எவ்வகைப் புகாரும் வந்ததில்லை. மகனுடைய தொழில் ஆர்வத்தைக் கண்டு பெரியசாமி பூரித்துப் போனான். இந்த வயதில் இவ்வளவு பொறுப் போடு தொழில் செய்கிற மகன், நாளைக்கு நிச்சயம் முதலாளி மாயாண்டியைப் போல் சொந்தக் கடை வைத்து நடத்தக்கூடிய தகுதியை அடைந்தே தீருவான்’ என்றுதான் அவன் கனவு கண்டான். ஆனால் பாவம்! அவனுக்கு எங்கே கண்ணப்பனின் உண்மை மன நிலை தெரியும்? கண்ணுறங் காமல் மகன் விழித்திருப்பது, விளக்குக்காக மட்டும் அல்ல, அதைவிட முக்கியமாகக் கச்சேரிகளைக் கேட்டு ரசிப்பதற் காகத்தான் என்கிற இரகசியம் பெரியசாமிக்கு எப்படித் தெரியப்போகிறது?

தன் சம்பளத்தோடு மகனுடைய சம்பளத்தையும் சேர்த்து மாதம் தவறாமல் இளைய பெண்டாட்டியிடம் கொண்டு போய்க் கொடுக்கும்போது பெரியசாமிக்கு மகிழ்சி தாங்க முடியாது. மூத்த சம்சாரத்தின் பிள்ளை சோடை அல்ல என்பதைத் திருச்சிராப்பள்ளிக்காரிக்கு எடுத்துக் காட்ட முடிந்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சி அது. ஆனால் அதை முனியம்மா கவனித்ததாகவே காட்டிக்கொள்ள மாட்டாள். மாறாக, ‘இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே சின்னப் பயல் சின்னப்பயல்’னு சொல்லிக்கிட்டு அரைச் சம்பளமும், கால் சம்பளமும் வாங்கிக்கிட்டு வரப்போறே? உலக்கை மாதிரி இருக்கிறான்; புள்ளை தலையிலே பெரிய விளக்கைத் தூக்கி வச்சாத் தேஞ்சாபோயிடுவான்? முழுச் சம்பளம் கொடுக்க மாட்டானா உன் முதளாளி?’ என்று காய்ந்து விழுவாள்.

பெரியசாமியின் செவிக்குள் புகுந்த அந்தச் சொற்கள் அவன் பொக்கையான இதயத்தில் புகுந்து வேதனையையும்