பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 புல்லின் இதழ்கள்

சங்கீதம் கற்றுக் கொள்வதற்கென்று ஒரு முறை தன் குருநாதருடைய வீடு தேடி வந்து அவர்கள் அடைந்த ஏமாற்றத்தை - ஏன், ஒரு வகையில் அதை அவமானம் என்றுகூடச் சொல்லலாம் - அவன் மறக்கவில்லை. ஆனால் இத்தனை செல்வமும் அந்தஸ்தும் இருந்தும் அவர்கள் அதைப் பெருந்தன்மையோடு மறந்துவிட்டனர். இல்லா விட்டால் பாகவதருடைய சிஷ்யனான அவனைக் தேடிக் கொண்டு, மகளுக்காக அம்மா சத்திரத்துக்குத் துரதுவர இசைவாளா?

“சுசீலாவுக்கும் வசந்திக்கும் பாட்டுச் சொல்லிக் கொடுப்பது தவறு இல்லையானால்; காந்தாமணிக்குச் சொல்லிக் கொடுப்பது மட்டும் தவறாகிவிடுமா? ஆனால் இத்தனைக்குப் பிறகு அதை மீறுவது எப்படி? எனவே காயத்திரியுடன் ஆலோசித்து வேறு ஏற்பாடு செய்து விட்டு, காந்தாமணிக்கு ஒரு நல்ல நாளில் பாடம் ஆரம் பித்துவிட வேண்டியது தான் - என்று ஓடுகிற ரெயிலில் அவன் மனம் ஒரு முடிவுக்கு வந்தது.

திருச்சியிலிருந்து திரும்பிய ஹரி நேராக சுவாமி மல்ையில் இறங்கினான். அப்போது ஏதேச்சையாகக் காயத்திரி மட்டுமே இருந்ததனால், ஹரிக்கு மிகவும் செளகரியமாகப் போய்விட்டது. சுசீலா, அம்மாவுடன் டாக்டர் வீட்டுக்குச் சென்றிருந்தாள்.

ஹரி மூன்று நாள் கச்சேரி விஷயங்களையும் சொல்லி, காந்தாமணியைச் சந்தித்த விதத்தையும் விளக்கினான்.

அவர்களுக்குப் பணத்தைப் பற்றிக் கவலை இல்லை. எத்தனை ரூபாய் கேட்டாலும் கொடுப்பார்கள். நான் ஊரில் இருக்கும்போது மட்டும் போய்ப் பாடம் எடுத் தால் போதும். மிகவும் அடக்கமான மனிதர்கள். ஏதோ நம்முடைய அப்பா பாணியில் அவர்களுக்கு அப்படி ஒர் ஆர்வம். முதல் நாளோ அர்த்தமில்லாமல்