பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 புல்லின் இதழ்கள்

சற்றைக்கெல்லாம் கையில் மருந்துடன் ஆஸ்பத்திரி யிலிருந்து சுலோ வந்தாள். ஹரியைப் பார்த்ததும், ஊருக்குப் போய் வந்த விவரங்களை விசாரித்தபடியே தந்தையின் அறைக்குச் சென்றுவிட்டாள்.

‘தஞ்சாவூர் விஷயத்தை மறந்து போய்க்கூடச் சுசீலாவிடம் மூச்சு விட்டு விடாதீர்கள்’ என்று ஹரி காயத்திரிக்கு ஞாபகப்படுத்தினாள்.

காயத்திரி சிரித்துக் கொண்டே, சரிதான்; நான் உன்னை எச்சரிக்கை செய்ய வந்தால், நீ எனக்குச் சொல்லிக் கொடுக்கிறாயா? சுசீலாவுக்கு மட்டும் அல்ல; வசந்தி, அப்பா, அம்மா எல்லாருக்குமே, காந்தாமணிகல்யாணராமன்தான். இதை நன்றாக நீ ஞாபகத்தில் வைத்துக்கொள்; உளறிவிடாதே’ என்று கூறினாள்.

அப்பொழுது அங்கு வந்த சுசீலாவைப் பார்த்தபடி காயத்திரியிடம் ஹரி, அக்கா, எனக்குத் தஞ்சாவூரில் கிடைத்திருச்கிற புது டியூஷனைப் பற்றிச் சுசீலாவுக்குச் சொல்ல வேண்டாமா?’ என்று அவள் வயிற்றெரிச்சலைக் கிளப்பினான்.

அதையெல்லாம் நான் சொல்லிக் கொள்கிறேன். அப்பா துரங்கி எழுவதற்குள் நீ சீக்கிரம் உன் குளியலை முடித்துவிட்டு வா; சீக்கிரம்’ என்று காயத்திரி அவனைத் துரிதப்படுத்திய போதே வெளியிலிருந்து லட்சுமியம்மாள் * ஹரி எப்பொழுது ஊரிலிருந்து வந்தாய்? எல்லாம். செளகரியமாக நடந்ததா?’ என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.

உடனே ஹரியும், “எல்லாம் உங்கள் ஆசிர்வாதத் தினால் நன்றாகவே நடந்தது அம்மா. திருச்சியில் கச்சேரிக்கு வந்த அத்தனை பேரும், ஐயாவைப் பற்றியே என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஜயாவின் உடம்பைப் பற்றிக் கேட்டு, அவர்கள் எல்லாரும் மாய்ந்து,