பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல முடிவு 267

போனார்கள்’ என்று அவன் கூறிய போதே லட்சுமியம் மாளின் கண்களில் நீர் பளபளத்தது.

  • ஆமாம். திருச்சிப் பக்கமெல்லாம் இவருக்கு ரொம்பப் பேர். பாகவதர் பாகவதர் என்று உயிரையே வைத்திருக்கிறார்கள்’ என்று என்னிடம் வந்து எத்த னையோ தடவை சொல்லியிருக்கிறார்’ என்று லட்சுமி யம்மாள் குரல் தழுதழுக்கக் கூறினான்.

இதற்குள் பாகவதர் விழித்துக்கொண்டு இருமுகிற சப்தம் கேட்கவே, எல்லாரும் அருகில் சென்றனர். புதி தாக வாங்கி வந்த மருந்தை அவுன்ஸ் கிளாசில் ஊற்றிக் கொடுத்தாள் சுசீலா. “ஆரஞ்சு வேண்டுமானால் உரித் துத் தரட்டுமா?’ என்று கேட்ட லட்சுமியம்மாளிடம், ‘ஒன்றும் வேண்டாம். ஊரிலிருந்து ஹரி எப்போது வந்தான்? என்னை எழுப்பக்கூடாதோ?’ என்று குறைப் பட்டுக்கொண்டார் பாகவதர்.

அருகில் இருந்த ஹரியின் கையைப் பிடித்துக் கொண்ட

வண்ணம், கச்சேரி எல்லாம் நன்றாக நடந்ததா ஹரி? தெப்பத்தில் ரொம்பக் கூட்டமோ?’ என்று பரிவுடன் விசாரித்தார்.

உடனே அருகில் இருந்த லட்சுமி, கச்சேரி எல்லாம் ரொம்பப் பிரமாதமாகப் பண்ணிவிட்டுத்தான் வந்திருக் கிறானாம். திருச்சியிலே கச்சேரிக்கு வந்த ஒவ்வொருத் தரும் உங்களைத்தான் விசாரிந்தார்களாம். குருவினுடைய பாணி அப்படியே சொட்டுகிறதே” என்று புகழாதவர் இல்லையாம்’ என்று கூறும்போதே, அது ஒன்றுதான் நான் செய்திருக்கிற பாக்கியம்’ என்றார் பாகவதர்.

கையில் இருந்த அவுன்ஸ் கிளாஸை வாங்கி வைத்த லட்சுமியம்மாள், ஏன் பசி இல்லை என்கிறீர்கள்? ஹரி ஆசையோடு வாங்கி வந்திருக்கிறான். ஒரு பழம் உரித்துத் தருகிறேனா தின்றால் என்ன?’ என்றாள்.