பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 புல்லின் இதழ்கள்

‘ஹரி வாங்கி வந்ததா? கொடு கொடு. இதை ஏன் நீ முதலிலேயே சொல்ல வில்லை?’ என்றார்.

லட்சுமியம்மாள் சிரித்தபடியே, பழத்தை உரித்துக் கொடுத்துக்கொண்டே கூறினாள்: “இது மட்டுமல்ல; இனிமேல் உங்களுக்கு அடிக்கடி வெற்றிலை போடத் தஞ்சாவூர் வண்ணாத்திச் சீவலும், எங்களுக்கு முந்திரிப் பருப்பும் கிடைக்கும். ஹரிக்குத் தஞ்சாவூரில் ஒரு பெரிய மிராசுதார் வீட்டுப் பிள்ளை சிஷ்யனாகத் கிடைத்திருக் கிறானாம். பாடத்துக்குப் போகும்போதும் வரும்போதும் வாங்கி வரலாம் அல்லவா? என்று கூறினாள்.

இதைக் கேட்டதும் பாகவருக்கு ஆனந்தம் தாங்க வில்லை. அப்படியா, பலே பலே! விஷயத்தை இரண்டு பேருமாகக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவிழ்த்து விடுகிறீர்கள். ஆமாம், மிராசுதாரருக்குத் தஞ்சாவூரே தானா, இல்லை. அங்கிருந்து பக்கத்துக் கிராமமா? உனக்கு எப்போதெல்லாம் வரச் செளகரியப்படும் என்று சொல்லிவிட்டாயா? இது என்ன ஆரம்பப் பாடமா, அல்லது ஏற்கனவே கொஞ்சம் பரிச்சயம் உண்டா?’ என்று கேள்விகளை ஒன்றன்மேல் ஒன்றாகக் கேட்டார்.

ஹரிக்குக் குருவிடம் பொய் சொல்ல வேண்டியிருக் கிறதே என்ற வேதனை உள்ளுற இருந்தாலும். வேறு வழி இல்லையே என்ற உணர்வுடன் அத்தனை கேள்வி களுக்கும் தயங்காமல் பதிலளித்தான். ஆனால் காயத்திரி கூறியிருந்ததுபோல், காந்தாமணி கொடுத்த இருநூறு ரூபாயைப் பற்றி மட்டும் பிரஸ் தாபிக்கவே இல்லை.

எல்லாவற்றையும் கேட்ட பிறகு பாகவதருக்கு நம்பிக்கை பலமாக விழுந்தது. ஹரி எப்படியும் பிழைத்