பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல முடிவு 269

துக்கொள்வான். அதற்கு வேண்டிய உழைப்பும் சாமர்த் தியமும் அவனிடம் இருக்கின்றன. மனிதர்களிடம் எப்படிப் பக்குவமாக நடந்துகொண்டு அவர்களைக் கவர வேண்டும் என்ற கலையும் அவனுக்குக் கைகூடியிருக்கிறது. மிராசுதாரர் என்ன, ஜமீன்தார் என்ன, பெரிய பெரிய மகாராஜாக்களே அவனைக் கூப்பிட்டு அனுப்பிக் கெளர விக்கப் போகிறார்கள். எல்லாம் தெய்வ சங்கல்பம். ஏதோ ஹரி மலைமேல் விளக்குப் போல் பிரகாசித்தால், அதை ஏற்றி வைத்த பெருமை ஒன்றுதான் என்னுடை யது’ என்று கண்களை மூடிக்கொண்டு பாகவதர் மனத் துக்குள்ளேயே மகிழ்ந்து கொண்டிருந்தார். அந்த மகிழ்ச்சி

யிலேயே உறங்கிப் போனார்.

ஊருக்கு வந்ததும், காந்தாமணிக்குப் புறப்பட்டு வருகிற தேதியைக் குறிப்பிட்டு எழுதிய கடிதத்திலேயே, வேறொரு முக்கியமான விஷயத்தையும் எழுதியிருந்தான் ஹரி. அது வேறொன்றும் அல்ல; எந்த விதமான பதில் கடிதமும் நீ சுவாமி மலைக்கோ எனக்கோ எழுத வேண் டாம்’ என்பதுதான். அதன்படி தன் கடிதத்துக்குப் பதில் வராது என்பது அவனுக்குத் தெரிந்திருந்தாலும், போட்ட கடிதம் போய்ச் சேர்ந்திருக்குமா?’ என்ற புதுக் கவலை ஏற்பட்டது.

விட்டை விட்டு வெளியே போக நேரும்போதெல்லாம், “நாம் இல்லாதபோது காந்தாமணியிடமிருந்து பதில் கடிதம் ஏதாவது தவறுதலாக வந்து விடுமோ?’ என்று மனம் தவித்தது. ஆனால் ஹரியின் இந்தக் கவலைகள் யாவும் காந்தாமணியின் வீட்டுக்குள் நுழைந்ததுமே தீர்ந்து போயின.

காந்தாமணியும் அவள் தாயும் ஹரியைக் கண்டதும் மிக்க அன்புடன் வரவேற்று உபசரித்தனர். கடிதம் கிடைத் ததையும், பதிலுக்கு நன்றி தெரிவிக்கக்கூட வழியில்லாமல், அதில் தங்களுக்குத் தடை உத்தரவு பிறப்பித்திருந்ததையும்