பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல முடிவு 271

மென்று இருந்தேன். அன்று பழங்களுடன் இரண்டு நூற. ரூபாய் நோட்டுகள் தவறுதலாக என் பைக்குள் வந்து விட்டன. இந்தாருங்கள்’ என்று சட்டைப் பையிலிருந்து எடுக்கப் போனபோதே காந்தாமணியின் தாய் தடுத்துக் கூறினாள்.

  • தவறுதலாக ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. நானே தான் தட்டில் பழங்களுடன் அதை உங்களுக்காக வைத்திருந்தேன். நீங்கள் அதைத் திருப்பித்தரக் கூடாது; இது காந்தாமணியின் விருப்பம்’ என்று கூறினாள். ஹரி மறுக்கவில்லை.

மாடியில் இருந்த பெரிய ஹாலில் விரிக்கப்பட் டிருந்த ரத்தினக் கம்பளத்தில் அழகான தம்பூரா ஒன்று படுத்துக் கிடந்தது. பக்கத்தில் இருந்த, ரவிவர்மா தீட்டிய பெரிய சரஸ்வதி படத்துக்கு அழகிய ரோஜாப்பூ மாலை போட்டிருந்தது. எதிரே இருந்த தட்டில், உதிரி மலர்கள், வாசனைச் சந்தனம், குங்குமம், கர்ப்பூரம், ஊதுவத்தி, அவல், பொரிகடலை, நாட்டுச் சர்க்கரை, பழ வகைகள் எல்லாம் நிவேதனத்துக்குத் தயாராக இருந்தன.

ஹரி பூஜைக்கு வேண்டிய சாமான்களை ஒழுங்காக எடுத்து வைத்துக் கொண்டான். பாகவதர் சொல்லிக் கொடுத்தது போல, பூஜையை முறையாகச் செய்தான். பண்டிகை நாளைப்போல காந்தாமணியும் அவள் தாயும் அதிகாலையிலேயே குளித்துப் புத்தாடை உடுத்து மிகுந்த

பக்தியோடு காணப்பட்டனர். தனக்கும், சங்கீத வித்தைக்கும் அவர்கள் எவ்வளவு மதிப்பும் கெளரவமும் காட்டுகிறார்கள் என்பதை அவன் மனம் நன்கு உணர்ந்தது.

ஹரி தம்பூராவைக் கையிலெடுத்துப் பார்த்தான். அது பிரமாதமான தந்த வேலைப்பாடுகள் கொண்ட