பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணப் பேச்சு 287

வசீகரமும் எடுத்துக் காட்டின. வாழ்க்கையில் ஒழுக்கத்தையும், கொள்கையில் நேர்மையையும் கடைப் பிடித்து வந்த அவன்; ஆண்களில் அழகனானவும், அறிவில் மேதையாகவும் விளங்கினான். தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய பாகவதருக்கு அவன் எத்தனை செய்தாலும் தகும், ஏற்கும் அல்லவா? சம்பாதிப்பதை எல்லாம் செலவழித்தாவது குருவைக் குணப்படுத்திவிட வேண்டு மென்று அவன் மனம் துடித்தது. போகிற ஊர்களில் அபூர்வமாகக் கிடைக்கும் பழங்களும், அவருக்குப் பிடித்தமான பொருள்களுமாகக் கொண்டு வந்து குவித்தான்.

ஆனால், அத்தனையையும் ஏற்றுக் கொண்டு அமைதி யுடன் இருக்கப் பாகவதரின் உள்ளம் என்ன கல்லால் ஆனதா? தாம் சம்பாதித்துக் கொண்டு வந்த காலத்தில் நடந்ததைவிடக் குடும்பச் செலவைச் சுருக்கினார். வயிறார எல்லாரும் உண்பதைத் தவிர மீதியை ஹரியின் பெயரிலேயே பாங்கில் சேமித்து வைத்தார். பணத்தின் தேவை, எப்போது ஏற்படும் ஏற்படாது என்று யாராவது அறுதியிட்டுக் கூறமுடியுமா? இன்று ஹரி இதைப்பற்றி லட்சியம் இல்லாதவனாகவோ, கவலைப்படாதவனா கவோ இருக்கலாம். ஆனால் நாளை?

“திருமணமாகி வசந்தியோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது? சுந்தரி கேட்கமாட்டாள். நேற்றுவரை என் புருஷன் சம்பாதித்தது எங்கே? என்று வசந்தி கேட்க மாட்டாள். கேட்டுவிட்டால்? அவளிடம் வெட்கமில் லாமல் இந்த மானங்கெட்ட வயிற்றையா காட்டிக் கொண்டு நிற்பது?

இப்படி, முக்காலமும் உணர்ந்து செயல் புரியும் முனிவரைப் போல் எண்ணிக் கொண்டு பாகவதர் ஹரியின் முன்னேற்றத்துக்கான காரியங்களையே செய்து கொண்டு வந்தார்.