பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. இசைப் போட்டி

சுசீலாவின் சுபாவம் மாறவில்லை. அவள் முயன் றாலும் அதை மாற்றிக்கொள்ள முடியவில்லை. ஹரிக்கு சமூகத்தில் தனி மதிப்பும். அந்தஸ்தும் படிப் படியாக ஏற்பட்டு நிலைத்துங்கூட, வீட்டுக்குள் வந்து விட்டால் சுசீலா ஏதாவது பேசி அவன் மனத்தைப் புண் படுத்தாமல் இருக்கமாட்டாள். வெளியூர்க் கச்சேரி முடிந்து வந்த அலுப்பைக்கூடப் பார்க்காமல் ஹரி உடனே தஞ்சாவூர்க் கல்யாணராமனை எண்ணிக்கொண்டு ஒடு. வதைப் பற்றி அவள் குறை கூறாத நாளே இல்லை.

ஹரியின் உடையிலும் பூசிக் கொள்ளும் சென்டிலும் அவள் பிழை கண்டாள். அதனால் அவன் தனக்காக வாங்கி வருவது தேவாமிருதமாக இருந்தாலும் அதைப் பிரியமாக ஏற்றுக் கொள்வதில்லை.

அதற்காக ஹரி தன் காரியம் எதையும் நிறுத்தி விடவில்லை; மாற்றிக் கொள்ளவும் இல்லை. மற்றவர்கள் அவனை ஒதுக்கிவிடவும் இல்லை. அம்மாவுக்கென்று தஞ்சாவூர்க் குடமிளகாய் கூடை கூடையாய் வாங்கி வருவான். பாகவதர் அவன் தஞ்சாவூருக்குப் புறப்படும் போதே வண்ணாத்திக் கடைச் சீவலுக்கு ஆர்டர் கொடுத்து விடுவார். காயத்திரிக்கும் வசந்திக்கும் மிகவும் பிடிக்கு மென்று வீசைக் கணத்கில் முந்திரிப் பருப்பு வாங்கி வருவான். சுசீலாவுக்கு மட்டும் பிரத்தியேகமாக ஒவ்வொரு தடவையும் விதவிதமான பட்டு ரவிக்கைத் துண்டுகளை வாங்கி வருவான். எல்லாருக்கும் ஐயன்