பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைப் போட்டி 291

பத்தையே இங்கே அழைத்து வந்து குடி வைத்துவிடுவது தானே?’ என்று ஒரு நாள் அவள் விளையாட்டாகக் கேட்டுவிட்டாள். அவ்வளவுதான், அப்படியே தம்பூரா வைக் கீழே வைத்துவிட்டுப் புறப்பட்டுவிட்டான் ஹரி.

அன்று ஹரியைச் சமாதானம் செய்து திரும்ப வீட்டுக்குள் இருத்துவதற்குள் காந்தாமணியின் தாய்க்குப் போதும் போதுமென்றாகி விட்டது. குருவைப் பற்றியோ, அவர் குடும்பத்தைப்பற்றியோ ஏதாவது கூறி விட்டால் அது ஹரிக்குத் துளிக்கூடப் பொறுக்காது என்று உணர்ந்த காந்தாமணி அதை நன்றாக முடிச்சுப் போட்டு வைத்துக் கொண்டாள்.

ஆம், அவனுக்குக் கோபமோ மனவருத்தமோ ஏற்பட் டால்; அந்தக் கணநேரத்துக்குள் தன் மனம் என்ன பாடு படுகிறது என்பதை, அன்றுதான் காந்தாமணி நன்கு உணர்ந்து கொண்டாள். ஹரி கோபித்துக் கொண்டு புறப்பட்டவுடன், தன் தாயால் சமாதானப் படுத்த முடியாமல் அவன் வராமலே போய்விட்டால் என்ன ஆகும் என்று அவளால் எண்ணிக்கூடப் பார்க்க முடிய வில்லை.

வரவர, ஹரியை வாரத்துக்கு ஒரு முறையாவது பாராமல் இருக்க நேர்ந்துவிட்டால் அவளுக்குப் பைத் தியமே பிடித்துவிடும்போல் தோன்றியது. அவனுடைய இனிய குரலை என்றும அருகில் இருந்து கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் அவளுள் ஒர் ஆவல் அபரிமிதமாக எழுந்தது.

அவனுடைய பேச்சிலும் அவனுடைய பாட்டைப் போலவே இனிமை கமழ்வதைக் கண்டுகொண்டவள் காந்தாமணி. அந்த இனிமை என்றுமே என்னைச் சுற்றிச் சூழ்ந்திருக்கலாகாதா?’ என்று அவள் அடிக்கடி தன் மனத்துக்குள்ளேயே சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தாள். தன்னிடம் அவனை அழைத்து வந்த தெய்வம் தன்னை