பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.24 புல்லின் இதழ்கள்

கல்யாணப் பந்தலிலும், சம்பந்திகளான மைனர் வீட்டார் தங்கியிருந்த பக்கத்து ஜாகையிலும் இருபது முப்பது விளக்குகளுக்கு மேல் வைத்திருந்தார்கள். அந்த

விளக்குகளைக் கவனித்துக் கொண்டு , அங்கேயே இருக்கும்படி பெரியசாமி மகனிடம் கூறினான். கண்ணப்ப னுக்கு இதைக் கேட்டதும் திக் கென்றது. * அப் பா,

நானும் உன் கூட ஊர்வலத்துக்கு வரேன் அப்பா. நீ இங்கே இந்த வேலைக்கு வேறு யாரையாவது போடு’ என்றான்.

மகன் இப்படி க் கூறக் காரணம் பல்லக்குப் பார்க்கும் ஆசை அல்ல; ஊர்வலத்தில் நாகசுரம் வாசிக்க வந்திருக்கும் பெரிய வித்துவானுடைய நாகசுரக் கச்சேரியைக் கேட்க வேண்டும்; விடிய விடியக் கேட்டு அந்த இன்னிசையை அநுபவிக்க வேண்டும் என்ற ஆர்வந்தான் என்பது பெரிய சாமிக்கு எப்படித் தெரியும்?

  • ஏலே, நீ அந்தக் கூட்டத்திலே வந்து மாட்டிக் இட்டேயானா நகங்கிப் போவே. செவனேன்னு நான் சொன்னதுபோலே இங்கேயே குந்தினாப்பிலே இருந்து, விளக்குகளை எல்லாம் கவனிச்சிக்கிட்டாப் போதும் “ என்று கண்டிப்பான உத்தரவைப் போட்டுவிட்டு நடந்

தான.

சிறிது துாரம் சென்றதும், பின்னால் தொடர்ந்து வரும் காலடி ஓசையைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த பெரிய சாமிக்குத் துாக்கிவாரிப் போட்டது, பூனைபோல நடந்து கண்ணப்பன் அவன் பின்னால் வந்து நின்று கொண்டிருந் தான்.

ஏன் கழுதே, என் பின்னாலேயே வந்து நிக்கறே? என்ன வேணும்?’’

  • நான்தான் அப்பவே சொன்னேனே அப்பா எனக்கு நாயனம் கேக்கணும். கண்ணப்பன் தயங்கிக் கூறி வாய் மூடவில்லை; பெரியசாமி பாய்ந்து அவன் தலைமயிரைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கி, “உனக்கு இந்த உதைதான்