பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 புல்லின் இதழ்கள்

காயத்திரிதான் வீட்டுக் காரியங்களைக் கவனித்தாள். லட்சுமியம்மாளின் நிலையைம் பார்த்ததும் வசந்திக்கு ஒன்றுமே பேசக்கூடத் தைரியம் வரவில்லை. அவளையும் அறியாமல் கண்களில் நீர் கசிந்தது.

‘ வருகிறேன் பெரியம்மா’ என்று சொல்லிக் கொண்டு புறப்பட்ட வசந்தியை லட்சுமியம்மாள் கையைப் பிடித்து அருகில் அமர்த்திக் தொண்டாள்.

  • ஊருக்குப் போனதும் அம்மாவிடம் இங்கேயுள்ள விஷயத்தைச் சொல்லாதே. சுந்தரியால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது. கேட்டால் பிராணனையே விட்டு விடுவாள். ஹரி சின்னக் குழந்தையா, கவலைப் பட்டுத் தேடித் திரிய? அவனுக்கு எத்தனையோ சிநேகிதம்; எவ்வளவோ காரியங்கள். கச்சேரி பண்ணிச் சம்பாதிக் கிறது போதாதென்று இந்தக் குடும்பத்தையும் அவன்தானே கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது? பெற்ற பிள்ளைகூட இந்தக் காலத்தில் உருகமாட்டான்: “ஐயா இப்படி ஒரேயடி யாகப் படுத்துக்கொண்டு விட்டாரே, என்று அவன் அத்தனை கவலைப்பட்டுக் கொண்டு கிடக்கிறான். ஐயாவுக்குச் சீக்கிரமே ஏதாவது நல்ல வைத்தியமாகச் செய்தாகவேண்டும். எத்தனை ஆயிரம் செலவானாலும்; பெரிய டாக்டர் யாரையாவது பிடித்து உடம்பைக் குணப் படுத்தினால்தான் எனக்கு நிம்மதி”, என்று ஓயாமல் கூறிக்கொண்டே இருப்பான். நமக்காக, எங்கே, யாரைத் தேடிக்கொண்டு அலைகிறானோ அவனுக்காக நாம் அநாவசியமாக இங்கே, கவலைப் பட்டுக் கொண்டு கிடக்கிறோம், அதனால்தான் சுசீலாவைத் திருவிடை மருதூருக்கு அனுப்புகிறபோது, உன் அம்மாவிடம், ஹரியைக் காணவில்லை; தேடிக்கொண்டு வந்திருக்கிறேன்என்று காட்டிக் கொன்ளாமல் பார்த்து விட்டு வா என்று நான் சொல்லி அனுப்பினேன்’ என்று லட்சுமியம்மாள் கூறிக்கொண்டிருந்தபோதே வசந்திக்குச் “சுரீர்” என்றது.