பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கொஞ்சும் அழகு

ஹரி விழித்தவுடன் எதிர்ச்சுவரில் இருந்த காலண்டர் தான் அவன் கண்ணில் பட்டது. தரையில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தவன், காந்தாமணியின் கட்டிலில் இடம் பெற்ற வரலாற்றையும், இடையே மூன்று நாள் ஒடிப்போனது எப்படி என்பதையும் சிந்தித்துக் கொண்டே எழுந்திருக்கப் போனவன் பதறிப் போய்த் தன் கால்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.

மண்ணில் நடந்து சென்றவன் பாதது.ாளி பட்டுக் கல்லொன்று பெண்ணாகி எழுந்த வித்தையைப் போலஹரியின் கால் பட்டு, கட்டிலின் கீழே படுத்திருந்த காந்தாமணி உறக்கம் கலைந்து வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

அதற்குள் அங்கே வந்த காந்தாமணியின் தாய் மிக்க மகிழ்ச்சியுடன், டீச்சர் ஸார், விழித்துக் கொண்டு விட்டீர்களா? நல்ல வேளை, எங்கள் வயிற்றில் பாலை வார்த்தீர்கள்! அப்படியே படுத்திருங்கள்’ என்று கூறிக் கொண்டே ஹரியின் அருகில் வந்தாள்.

விழிப்பு வந்ததும் கொடுக்கும்படி டாக்டர் தந்த மருந்தையும், மாத்திரையையும் ஹரியின் கையில் கொடுத்துச் சாப்பிடச் செய்தாள். ‘ உடம்பு இப்போது எப்படி இருக்கிறது?’ என்று மிகவும் கவலையோடு கேட்ட அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே ஹரி கூறினான்: “உங்களுக்கெல்லாம் வீண் சிரமத்தைக் கொடுத்து மிகவும் பயமுறுத்தி விட்டேன்.”