பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மண்டபச் சாதகன்

ஏழையாகப் பிறப்பதே குற்றம். அதை விடத் தனக் கென்று சில விருப்பு வெறுப்புகளைச் சுமந்து திரிவது எவ்வளவு பெரிய குற்றம்? அந்தக் குற்றத்துக்கு உரிய தண்டனையைத் தான் கண்ணப்பனின் மனம் அப்போது அநுபவித்தது.

அப்பன் மனம் போனபடி அடித்து நொறுக்கியவுடன் பதிலுக்கு அவனால் செய்ய முடிந்தது. மனம் போனபடி அழுது தீர்ப்பது என்கிற ஒன்றுதான்.

கல்யாண வீடு வருவதற்குள் அவனாகவே தன்னைத் தேற்றிக் கொண்டான். மூலைக்கு மூலை குட்டிப் பிசாசு களைப் போல விளக்குகள் அவனைக் கண்டு, ‘வா, வா என்று அழைத்தன.

  • சொன்னபடி மரியாதையாக முதலிலேயே எங்களிடம் வந்து உட்கார்ந்திருந்தால் இந்த அடியும் உதையும் உனக்குக் கிடைத் திருக்குமா?’ என்று அவை அவனைக் கேட்பன போலிருந்தன. கண்ணப்பன் தன்னையும் மீறி நகைத்து விட்டான்.

மேலும். பெரியசாமி கண்ணப்பனையே முழுவதும் நம்பிக் கல்யாண வீட்டில் இருக்கும்படி வற்புறுத்திக் கூறிய தற்குக் காரணம் உண்டு. பெட்ரோமாக்ஸ் விளக்குகளைப் பற்றிய எல்லா நுணுக்கங்களையும் பெரியசாமி, கண்ணப்ப னுக்குக் கற்றுக் கொடுத்திருந்தான்.