பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 புல்லின் இதழ்கள்

சிறந்த இசைத் திறனும், என்னை உன்னிடம் இத்தனை துாரம் அன்பு செலுத்தி ஈடுபாடு கொள்ளச் செய்தன. இவையன்றி, வேறு எதைப் பற்றியும் நான் எண்ணிய வனல்ல. நீயும் அநாவசியமாக வேறு எதைப் பற்றியும் எண்ணாதே. நீ என் மாணவி. நான் உன் குரு’ என்ற உறவைத் தவிர, வேறு எந்தப் பாத்தியதையும் நமக்குள் இருக்கக் கூடாது. அப்படி யிருந்தால்தான், நான் இனியும் இந்த வீட்டுக்கு வருவதில் அர்த்தம் இருக்கிறது. ஒரு முடிவைத் தேர்ந்தெடுக்க வேண்டியது உன் பொறுப்பு’ என்று ஹரி மூச்சு விடாமல் கூறிய போதே, காந்தா மணிக்குத் துக்கம் பீரிட்டுக் கொண்டு வந்தது. அவள் தன்னையும் மீறி அழுதுவிட்டாள். அதே சமயம் வாசற். கதவை யாரோ பலமாகத் தட்டுகிற சத்தம் கேட்கவே, கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் வேகமாகக் கீழே இறங்கி ஓடினாள். பூனையும் அவளைத் தொடர்ந்தது. *