பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 புல்லின் இதழ்கள்

விடுகிற ராசி என்றுமே உண்டு, அதிலும் பணக்காரியான காந்தாமணியைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? ஹரிக்கு அங்கே இந்நேரம், ராஜ வைத்தியந்தான் நடக்கும்’ என்று காந்தாமணியைப் பற்றி உயர்வாகவே கற்பனை செய்து மனத்தைத் தேற்றிக் கொண்டாள்.

வசந்தி, எல்லா விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து

கொண்டுதான், ஊருக்குப் புறப்பட்டாள். ஹரியின் விஷ

யத்தில், தனக்கும் அம்மாவுக்கும் பங்கு உண்டு; அவனுக்கு ஏற்படும் நல்லது கெட்டதற்குத் தாங்களும் பாத்தியதைப் பட்டவர்கள் அல்லது அதற்காக

வேதனைப்படுகிறவர்கள் என்று அங்கே அதிகமாக யாரும் காட்டிக் கொள்ளாதது. வசந்திக்கு உள்ளுற வேதனையை அளித்தது. ஒரு விதத்தில், தன்னையும் அம்மாவையும், அநேகமாக எல்லாரும் மறந்து விட்டதாகவோ, ஏன் ஒதுக்கிவிட்டதாகவோ கூட வசந்திக்குத் தோன்றியது. ஆனால் அவள் தன் அநுபவக் குறைவினால் அப்படி எண்ணிவதாகவே, சுந்தரி மகளைக் கண்டித்தாள். ஆனால் அதை வசந்தி ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. வரவர, பெரியம்மாவைத் தவிர, அந்த வீட்டில் நம்மை யாரும் மதிப்பதில்லை என்று அவள் கூறினாள்.

  • நீ சொல்லுகிறபடியே இருந்தாலும், அதற்காக நாம் அவர்களை ஒதுக்க முடியாது; ஒட்டிக்கொண்டுதான். வாழ்ந்தாக வேண்டும். யார் எப்படி இருந்தாலும், இனி மேல் எனக்கு எல்லாம் ஒன்றுதான். ஆனால், ஹரி எப்படி நம்மிடம் இருக்கிறான் என்பதுதான் நமக்கு முக்கியம்: என்று கூறினாள்.

குறிப்பிட்டபடி ஹரி தஞ்சாவூரிலிருந்து வியாழக் கிழமை சுவாமிமலைக்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டவுடன்தான், பாகவதருக்கும், லட்சுமியம்மாளுக்கும் தெம்பு வந்தது.