பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய விலாசம் 317

சுசீலா வாய் ஓயாமல், ஹரியைக் கோபித்துக் கொண்டே இருந்தாள். மேல் விலாசம் இல்லாமல், மொட்டைக் கடிதம் எழுதிப் போடுகிற பழக்கம் என்ன பழக்கம்? எங்களுக்கெல்லாம் எத்தனை கவலை யாய்ப் போய்விட்டது! வந்து ஒருநடை பார்க்கலாமென் றால் கூட, தஞ்சாவூரில் மிராசுதாரர் கல்யாணராமன் வீடு என்றால் யார் கண்டார்கள்? எங்கே தேடிக்கொண்டு போவது?’ என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்டு ஹரியைத் திணற அடித்தாள்.

ஹரி, அதற்கெல்லாம் சேர்த்து ஒரே பதில்தான் கூறி னான்: நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன். இன்னும் பூரண குணம் அடையவில்லை’ என்றான்; உன் தாக்குதல்களை என்னால் தாங்க முடியாது’ என்பதே போல்.

ஹரி ஊரில் இல்லாதபோது வந்த கடிதங்களைக் கொண்டு வரும்படி பாகவதர் கூறினார். சுசீலா அவற் றைக் கொண்டு வந்து ஹரியினிடம் கொடுத்தாள். முக்கிய மான கடிதங்களுக்கு அவன் உடனே பதில் எழுதிப் போட்டான்.

பாகவதரைப் பார்க்க டாக்டார் வந்தார். அப்போது அருகில் இருந்த சுசீலா, ஹரியின் உடம்பையும் பார்க்கும் படி கூறினாள். ஹரியையும் சோதித்து நீளமான பிரிஸ் கிரிப்ஷன்’ ஒன்றை எழுதிக் கொடுத்தார். ‘ அதிக உழைப் பினால் ஏற்பட்ட பலவீனத்தைத் தவிர, வேறு ஒன்று மில்லை’ என்று சொன்னார். |

-டாக்டர் சொல்லிவிட்டுப் போனது ஒரு புறம் இருக் கட்டும்; கச்சேரிக்குப் போய்ம் பாட வேண்டியது தீராத விஷயம். ஆனால், திருவிடைமருதூருக்கும், தஞ்சாவூருக் கும், இப்போது டியூஷனுக்குப் போகாவிட்டால் என்ன?’ - இதுதான் சுசீலாவின் கேள்வி.