பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 புல்லின் இதழ்கள்

தான். மத்தியில் ஒரு வாரத்துக்கு அவனுக்குச் சிறிய ஒய்வு இருந்தது. அதில், தஞ்சாவூருக்குப் போகலாம் என்று: ஹரி முடிவு செய்திருந்தான். அவன் ஊருக்கு வந்த பிறகு காந்தாமணியிடமிருந்து தன்னைப் பற்றி விசாரித்துக் கடிதம் ஏதாவது வரும் என்றே ஆவலுடன் எதிர்பார்த் தான். ஆனால், அது எத்தனை பெரிய பைத்தியக் காரத் தனம் என்பது அவனுக்குப் பிறகு பட்டது. காந்தா மணியைக் கடிதம் எழுதக்கூடாது என்று எச்சரித்தவனே அவன்தானே?

எப்படியும், மறுநாளே தஞ்சாவூர்ப் பாடத்துக்குப் போய்விட்டு வந்தால்தான் அவன் மனத்துக்கு அமைதி ஏற்படும்போல் இருந்தது. காந்தாமணியைப் பார்க்காமல் அவனால் இருக்க முடியவில்லை. பாகவதர் அவனை நேசிப்பதுபோல், அவன் காந்தாமணியை நேசித்தான். அன்று அவனுடைய பேச்சு காந்தாமணிக்கு அதிர்ச்சியை அளித்திருந்தாலும், புத்திசாலியான அவள். யோசித்துப் பார்த்து என்ன முடிவு செய்து வைத்திருக்கிறாள் என்று. அறிந்துகொள்ள வேண்டாமா என்று அவன் மனம் பறந்தது.

மறுநாள் காலை தஞ்சாவூருக்குப் புறப்பட்டது போது சுலோ, போகிற இடத்தின் விலாசத்தைக் கொடுத்து. விட்டுப்போங்கள்’ என்று குறுக்கே நின்றாள்.

‘ஏன், மறுபடியும் நான் அங்கே போய்ப் படுக்கையில் விழுந்து விடுவேன் என்ற? அப்படியெல்லாம் ஒரு நாளும் நேராது. நூறு ரூபாய் டானிக் சாப்பிடிருக்கிறேன். ஆறு

மாதத்துக்கு கவலை இல்லை; வழியைவிடு’ என்றான்

ஹரி.

உடனே சுசீலா, உங்களைப் பற்றி இங்கே கவலைப்

படுவதாகவா நான் கூறினேன்?’ என்றாள் அலட்சியத்

துடன்.