பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய விலாசம் 321.

பின் எதற்கு விலாசம் கேட்கிறாய்?’

‘எல்லாருடைய கவலைக்கும் பாத்திரமாய்ப் படுத் திருக்கும் அப்பாவுக்காகத் தான் கேட்கிறேன், விலாசத் தைச் சொல்லுங்கள்.’

ஹரி பரிதாபமாகத் திரும்பிப் பார்த்தான். காயத்திரி கதவோரமாக நின்று, மாட்டிக் கொண்டாயா?’ என்பது போல் சிரித்தாள்.

என்ன விழிக்கிறிர்கள்? விலாசம் மறந்து போய் விட்டதா?’ சுசீலா ஒரு சொடுக்குச் சொடுக்கினாள். பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு ஹரி அவளை விழித்துப் பார்த்தான்.

விலாசம் மறந்துவிட்டது என்று யார் சொன்னார் கள் சுசீலா? நீ போய்ப் பேப்பரும் பென்சிலும் கொண்டு வா; எழுதிக் கொடுக்கிறேன்’ என்றான் ஹரி,

  • இதற்குப் பேப்பரும் பென்சிலும் வேண்டாம். சும்மாச் சொல்லுங்கள். நான் மாடிக்குப் போய்க். குறித்துக் கொள்கிறேன்’ என்றாள் சுசீலா.

‘சரி சரி, உன் இஷ்டம். விலாசத்தைச் சொல்லி விடுகிறேன்’ என்ற ஹரி, ‘ஆர். கல்யாணராமன், கேர் ஆஃப் ஆதிநாராயண சேஷசாயி வைகுண்ட நாதன், பாலஸ் கார்டன்ஸ், 112 / 283 கட்பாலஸ் ரோடு, ஏழாவது சந்து, தஞ்சாவூர்’, என்று கூறி முடிப்பதற்குள், கொஞ்சம் இருங் கள்’ என்று குறுக்கிட்ட சுசீலா, பெரிய மிராசுதார். ராவ்பகதூர் என்று கூறிவிட்டுச் சந்தையும் பொந்தையும் சொல்கிறீர்களே’ என்று கூறிக்கொண்டே பேப்பரும் பென்சிலும் எடுத்து வருகிறேன்’, என்று மாடியை நோக்கி ஓடினாள். வெற்றிப் புன்னகையோடு ஹரி காயத்திரியைப் பார்த்துச் சிரித்தான்.