பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய விலாசம் 323

தெரியும். ஏனைனில், அவர்களுடைய உபசாரம் உதட்டிலிருந்து வருவதில்லை; அந்தரங்க சுத்தியுடன் இதயத்திலிருந்து வருவது. ஆகவே, அவர்கள் மனத்தைப் புண்படுத்த ஹரிக்கு விருப்பமில்லை.

மறுக்காமல், அவன் நீட்டிய காபியை மளமளவென்று குடித்துவிட்டுச் சட்டைப்பைக்குள் கைவிட்டுப் பணத்தோடு

ஹரி திரும்பினான்: பக்கத்திலிருந்த பையனைக் காண வில்லை. டாடா காட்டிக்கொண்டே, இன்ஜின் வரைப் போய்விட்டான். இப்படிப்பட்ட விசிறிகள் ஹரிக்கு

ரெயிலும் பஸ்ஸும் ஒடுகிற மார்க்கத்தில் அனேகர் உண்டு.

அந்தப் பையனை மனத்தால் வாழ்த்திக் கொண்டே, மேம்பாலம் ஏறப் போனான். கையிலிருந்த பையை யாரோ பிடுங்குவது போல இருக்கவே, ஹரி திரும்பிப் பார்த்தான். பக்கிரி மந்தகாசம் புரிந்து கொண்டே, இரண்டு கைகளினாலும் ஹரியிடமிருந்த பையைப் பிடிவாதமாகக் கேட்டு வாங்கி, நாய்க் குட்டி போல் குழைந்து கொண்டே பின்னாலேயே பாலத்தில் ஏறினான்.

எங்கே இவ்வளவு நூரம், மாமா?’ ஹரி மெது வாகக் கேட்டான்.

நாளாயிற்று! உங்களைப் பார்த்துவிட்டுப் போக லாம் என்றுதான் வந்தேன்’ என்றான் பக்கிரி. இப்போ தெல்லாம் பக்கிரி, மருமானை மரியாதை போட்டுத்தான் அழைப்பது வழக்கம்.

ஹரி சிரிக்காமல் கேட்டான்: சாதாரணமாகவே பேசு மாமா. நமக்குள்ளே மரியாதை எதற்கு? நான் இப்போது இங்கு வருவேன் என்று உனக்கு எப்படித் தெரிந்தது?”

அவன் பதில் சொல்லாததைக் கண்டு, இந்தச் சிங்கப் பூர்க் கைலியைக் கட்டிக்கொண்டு என் பின்னால் வரக்