பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்டபச் சாதகன் 27

வெளிச்சம் மங்கி விளக்கு மக்கர் பண்ணினால் அவ்வப் போது காற்று அடித்துச் சரி பண்ணவோ, பின் போட்டு நிப்பிளைத் திறந்து தடைப்பட்டுப்போன எண்ணெயைச் சரி செய்யவோ, சமயத்தில் மாண்டில்’ அறுந்தால் புதிய தைக் கட்டிச் சமாளிக்கவோ, எல்லாம் அவனுக்கு அந்த வயதிலேயே புரிந்து விட்டன. ஆனால் அவன் மனம் மட்டும் இசையின்பத்தில் லயித்திருந்தது. அதற்காக, தான் சங்கீத வித்வானாக வேண்டும்; யாரிடமாவது பாட்டுக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பன போன்ற எண்ணங்கள் அவன் உள்ளத்தில் எழவில்லை. சில சமயங்களில் அவன் கேள்வி ஞானத்தில் அறிந்ததை வீட்டில் எப்பொழுதாவது பாடுவான். பாடுகிற அந்த வாயில் தவறாமல் அப்போதே அடி விழும். சோற்றுக்குக் குடும்பம் தாளம் போடுது: அக்கறையா இன்னும் பத்துக் காசு அதிகம் சம்பாதிச்சுக் கிட்டு வரத்துக்கு துப்பில்லை; உனக்குப் பாட்டு ஒரு கேடா?’ என்ற சிற்றன்னையின் கொடும் தாக்குதல்களுக்கு அவன் பல முறை இலக்காயிருக்கிறான். அதன் பிறகு கண்ணப்பன் அந்த வீட்டில் வாயே திறந்ததில்லை. யாரும் இல்லாத தோட்டமும் துரவும் ஆற்றங்கரை மண்டபமுந் தாம் கண்ணப்பனுடைய இசையார்வத்தைத் தணிக்கும் ஆஸ்தான மண்டபங்களாகத் திகழ்ந்தன.

நாகசுரத்தைக் கேட்க ஐந்து நாட்களாகக் கூடிக் கூடிப் பேசி ஊரே காத்துக்கிடக்கும்போது, அவன் மட்டும் அந்தப் பந்தற்கால்களையும் சம்பந்தி வீட்டுக்காரர்களையும் பார்த் துக் கொண்டு விளக்குக்குக் காவல் இருப்பதா?

ஊர்வலம் கிளம்பித் தெருமுனையை அடைந்தது. இனிமேல்தான் சிவன் கோயில் நான்கு மாட விதிகளிலும் ஊர்வலம் வந்தாக வேண்டும். நாகசுர இன்னிசையும், தவுலின் நாதமும் அவனை அழைத்தன. அவன் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். மறுகணம், தன்னை நம்பியிருக்கும் அத்தனை விளக்குகளையும் அநாதைகளாக்கிக் கூட்டத்தில் போய்ச் சேர்ந்து விட்டான்.