பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 புல்லின் இதழ்கள்

கூடாதென்று, உனக்கு நூறு தடவையாவது நான் சொல் லியிருப்பேன் இல்லையா மாமா?’ என்றான் ஹரி.

கோவிச்சுக்காதே தம்பி; பொய் சொல்லிப்பிட் டேன். நான் இப்படி இங்கே உன்னைச் சந்திப்பேன்னு நினைக்கவே இல்லை. எதிர்பாராமல் பார்த்தவுடன், தொட்டுக் கூப்பிடணும்னு ஆசையிலே கூப்பிட்டேன்.” பக்கிரி மிகுந்த தாழ்ந்த குரலிலேயே கூறினான்.

இருவரும் பேசிக்கொண்ட, வண்டிப் பேட்டையை அடைந்தனர்.

சரி, ஊரிலே எல்லாரும் செளக்கியந்தானே?”,

  • எல்லாரும் செளக்கியந்தான். அப்பாகுக்குத்தான் ரொம்ப டேஞ்சரா இருக்கு. பாவாடை நிதம் ரெண்டு வேளையும் வந்து கவனிச்சு, மருந்துத் தண்ணி வாங்கிக் கொடுக்கிறான்.’

ஹரிக்குச் சுரீர்” என்றது. பக்கிரியின் பேச்சில் தொனித்த அபஸ்வரம் அவன் மனத்தைக் கலக்கியது. மின்னல் வேகத்தில் பாவாடையோடு, சித்தியின் பழைய நினைவும் அவன் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சியது.

  • அப்பனைக் கவனித்துக் கொள்ளப் பாவாடைதான் வேண்டுமோ? ஏன் மாமா, பணம் நான் கொடுக்கிறேன்: உனக்கு வீட்டோடு இருந்து குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளக்கூட முடியவில்லையா?’ ‘
  • நீ கொடுக்கிறதைக் கொண்டு மாத்திரம் குடும்பம் நடக்குமா தம்பி?’’
  • அதுக்காக நீயும் ரெயிலடி, பஸ் ஸ்டாண்டு, சினிமாக் கொட்டகை இங்கே எல்லாம் சம்பாதிக்கப் புறப்பட்டிருக்கிறாயா?”

H. H. F. H. H H H = H = H H H = H # *